மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

23ம் தேதி எல்லாம் முடிஞ்சிரும்னு சொன்னாரே ஸ்டாலின்.. ராஜேந்திர பாலாஜி நக்கல்!

Google Oneindia Tamil News

Recommended Video

    ராஜேந்திர பாலாஜி பேட்டி -வீடியோ

    மதுரை : அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலளித்துள்ளர்

    மதுரை விமான நிலையத்தில் தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும் என்பது மக்களின் எண்ணம் மக்களின் பிரதிபலிப்பு தமிழகத்தில் பார்க்க முடிகிறது. இந்த ஆட்சியை நடத்துவதற்கு எவ்வளவு பெரும்பான்மை தேவையோ அதை எடப்பாடி ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள்.

    OPS and EPS will decide about Ravindranath Minister post: Rajendrabalaji

    ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் அவர்கள் முடிவு எடுப்பார்கள் என கூறினார். பாஜக அசுர பலத்தில் வந்துள்ளது பாஜக தற்போது பலவீனமாக இல்லை அதனால் யாரையும் எதிர்பார்த்து அவர்கள் இல்லை. தமிழகத்திற்கு தேவையான நிதிகளை வழங்குவார்கள். ஆதரவாக இருப்பார்கள்.

    திமுக ஸ்டாலின் உத்தமபுத்திரன் மாதிரி அம்பானி குடும்பத்திலிருந்து பிறந்து வந்த மாதிரி பேசி வருகிறார். திருட்டு ரயிலில் வந்த கருணாநிதியின் மகன் தான் ஸ்டாலின் இன்று மிட்டா மிராசு மாதிரி பேசி வருகிறார். ஆசியாவில் ஏழாவது பணக்காரராக ஸ்டாலின் இருக்கிறார்.

    சட்டசபை தேர்தல்: தமிழக பாஜக.வை உயிர்ப்பிக்க சு.சுவாமி தரும் ஐடியா! சட்டசபை தேர்தல்: தமிழக பாஜக.வை உயிர்ப்பிக்க சு.சுவாமி தரும் ஐடியா!

    23ம் தேதி அனைவரும் ஜெயிலுக்கு சென்று விடுவார்கள் முதலவராக போகிறேன் என்றும் கலைஞர் கல்லறையில் தான் அமைச்சரவை பதவி ஏற்க வேண்டும் என்று இடம் பார்த்தார்கள். தமிழகத்தில் அவர் முதல்வர் ஆவதை மக்கள் விரும்பவில்லை என்பது இந்த சட்டமன்ற தேர்தல் மூலமாக தெரிகிறது.

    அவர் அதிக பெருபான்மையில் வெற்றி பெற்றால் கூட தமிழகத்தின் முதல்வராக முடியாது, வாய்ப்பே இல்லை. தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்தான் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

    English summary
    OPS and EPS will decide about Ravindranath Minister post said Minister Rajendrabalaji.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X