அதிமுகவில் சதி வலை பின்னியவர்கள் யார்னு தெரியும்.. விரைவில் தண்டனை.. ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு
மதுரை: அதிமுகவில் அசாதாரண சூழல் நிலவி காரணமாக சதி வலை பின்னப்பட்டவர்களுக்கு மக்கள் விரைவில் பாடம் கற்பித்து தண்டனை வழங்குவார்கள் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக் குழுவில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் அவமதிக்கப்பட்ட நிலையில் அவர் நேராக டெல்லி சென்று அங்கு பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருந்தார்.
3 லோக்சபா, 7 சட்டசபை இடைத்தேர்தல்- பாஜக அமோகம்! ஆம் ஆத்மி, அகிலேஷின் சமாஜ்வாதிக்கு அதிர்ச்சி!
ஆனால் பிரதமர் நேரம் வழங்கவில்லை என தெரிகிறது. பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி புறப்பட்டு சென்றதால் வேறு வழியின்றி டெல்லியிலிருந்து நேற்று மாலை ஓபிஎஸ் சென்னை வந்தார்.

மதுரை விமான நிலையம்
இதையடுத்து அவர் இன்று மதுரைக்கு சென்று அங்கிருந்து தேனிக்கு தனது வீட்டுக்கு செல்கிறார். அங்கு தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த நிலையில் மதுரைக்கு வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உயிரினும் மேலான தொண்டர்கள் என் பககம் இருக்கிறார்கள்.

ஜெயலலிதா
ஜெயலலிதா மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்றார். அது போல் தொண்டர்களுக்காகவே நான், தொண்டர்களுடனே நான் என்றும் இருப்பேன். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் இந்த இயக்கத்தை மனிதாபிமான இயக்கமாக நடத்தினார்கள். தமிழக மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று 30 ஆண்டுகாலம் தமிழக முதல்வராக நல்லாட்சி நடத்தியவர்கள்.

அரசியல் எதிர்காலம்
எனது அரசியல் எதிர்காலத்தை தொண்டர்களும் மக்களும் தீர்மானிப்பார்கள். அதிமுகவில் யாரால் சதி வலை பின்னப்பட்டது என்பதற்கு கூடிய விரைவில் மக்களே அவர்களுக்கு நல்ல தீர்ப்பையும் தண்டனையையும் தருவார்கள். விரைவில் எல்லா சிக்கல்களும் தீரும். இந்த சிக்கலுக்கு யார் காரணம் என்பதும் எனக்கு தெரியும் என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.

சுற்றுப்பயணம்
இந்த நிலையில் நமது அம்மா நாளிதழில் நிறுவனர் என்ற இடத்தில் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் பெயர்கள் இருக்கும். ஆனால் இன்று வெளியான நாளிதழில் ஓபிஎஸ் பெயர் நீக்கப்பட்டிருந்தது. சசிகலாவை போல் ஓபிஎஸ்ஸும் விரைவில் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என தெரிகிறது.