மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார் நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன்!

Google Oneindia Tamil News

மதுரை: மதுரை லோக்சபா தொகுதியில் நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் போட்டியிடுகிறார்.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுகவும், திமுகவும் பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைத்தும் டிடிவி தினகரனின் அமமுக எஸ்டிபிஐ கட்சியுடன் கூட்டணி வைத்தும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் தினகரன் கட்சி 39 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சியான எஸ்டிபிஐ கட்சி ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது. மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் வழக்கறிஞருமான பசும்பொன் பாண்டியன் போட்டியிடுகிறார்.

ஒளிமயமான எதிர்காலம்.. எம்ஜிஆர் பாட்டா, சிவாஜி பாட்டா.. பாவம் பிரேமலதாவே குழம்பி போயிட்டாங்க!ஒளிமயமான எதிர்காலம்.. எம்ஜிஆர் பாட்டா, சிவாஜி பாட்டா.. பாவம் பிரேமலதாவே குழம்பி போயிட்டாங்க!

வழக்கறிஞர்

வழக்கறிஞர்

இவர் வேறு யாரும் இல்லை. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்றதாக குற்றம்சாட்டப்பட்ட அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஆஜரான வழக்கறிஞர் ஆவார்.

அரசியல் ரீதியாக

அரசியல் ரீதியாக

இவர் இன்று மதுரை தேர்தல் அதிகாரி நடராஜனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மதுரை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் உள்பட அனைவரும் அரசியல் ரீதியாக எனக்கு தகுதியானவர்கள் கிடையாது.

திருநெல்வேலி லோக்சபா தொகுதி விவரம் விரல் நுனியில்

கேள்வி

கேள்வி

தினகரன் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் ஜெயலலிதாவுக்கு துரோகம் இழைத்துவிட்டனர் என்றார். நிர்மலா தேவியை பிரசாரத்துக்கு அழைப்பீர்களா என்ற கேள்விக்கு நிர்மலா தேவிக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை.

சட்ட போராட்டம்

சட்ட போராட்டம்

சிறையில் சக கைதிகளை விட்டு நிர்மலா தேவியை மூச்சைப் பிடித்து கொல்லப் பார்த்துள்ளனர். நிர்மலா தேவிக்கு பெரிய சட்ட போராட்டமே நடத்தி ஜாமீன் பெற்று தந்துவிட்டேன்.

பிரசாரம்

பிரசாரம்

விபசார விடுதியாகவே மாறிவிட்ட மதுரை ஆவின் நிறுவனத்தில் நடைபெறும் பாலியல் சம்பவங்கள், ஆளும் கட்சியின் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து எனது பிரசாரம் இருக்கும். மதுரை நாடாளுமன்ற தொகுதியை இந்தியாவின் முதன்மை தொகுதியாக மாற்றுவேன். அதனை நிருபிக்கும் வகையில் தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன். மூடிய தொழிற்சாலைகளை மீண்டும் திறந்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிப்பேன் என்றார்.

English summary
Nirmala Devi's advocate Pasumpon Pandiyan contest in Madurai Lok sabha constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X