மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மதுரை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம்.. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

Google Oneindia Tamil News

Recommended Video

    மதுரை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம்..வீடியோ

    மதுரை: மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.

    Pattabhishekam for Meenakshi Amman; Thousands of devotees worship

    சித்திரை மாத ராசி பலன்கள் 2019: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள் பரிகாரங்கள்சித்திரை மாத ராசி பலன்கள் 2019: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள் பரிகாரங்கள்

    இந்நிலையில், சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் விழா, கோயிலில் அம்மன் சந்நிதி ஆறுகால் பீடத்தில் கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மனுக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கிரீடம் சாற்றி, செங்கோல் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து அம்மனிடமிருந்து செங்கோலைப் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன்,சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரம் சுற்றி வந்து மீண்டும் அம்மனிடம் செங்கோலை சமர்ப்பித்தார். பட்டாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் தொடர்ச்சியாக மீனாட்சி அம்மன் தடாதகைப் பிராட்டியாக மதுரையில் அவதரித்து ஆட்சி புரிந்த புராணத்தைக் குறிக்கும் வகையில், திக்கு விஜயம் நிறைவடைந்துள்ள நிலையில், விழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சிகளான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் 17 ஆம் தேதியும், மாசி வீதிகளில் திருத்தேரோட்டம் வரும் 18-ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது.

    இந்நிலையில், மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவின் முத்திரை பதிக்கும் விழாவான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு வரும் 19ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கானோர் கூடும் நிகழ்வு நெருங்கி வரும் நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும் முக்கிய விழாக்கள் நடைபெற்று வருவதால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    English summary
    Festival in Madurai:Pattabhishekam for Meenakshi Amman, Thousands of devotees worship
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X