மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மக்கள் பதில் சொல்வார்கள்.. ரஜினிகாந்த் கருத்திற்கு விளக்கம் சொன்ன பிரேமலதா விஜயகாந்த்!

தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை என்று ரஜினிகாந்த் சொன்னதற்கு தற்போது தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

மதுரை: தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை என்று ரஜினிகாந்த் சொன்னதற்கு தற்போது தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த வாரம் சென்னையில் அளித்த பேட்டி பெரிய அளவில் வைரலாகி உள்ளது. அவர் தனது பேட்டியில், தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை. சிறந்த தலைவருக்கான வெற்றிடம் நிலவுகிறது என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.

People will give an answer for Rajinikanth interview says Premalatha Vijayakanth

இந்த நிலையில் திருப்பரங்குன்றத்தில் திருமணத்தில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த் இதுகுறித்து பேட்டி அளித்தார். அதில், தலைமைக்கான வெற்றிடம் இருக்கிறது என்று ரஜினி சொல்கிறார். அதற்கு என்ன காரணம் என்று அவர்தான் சொல்ல வேண்டும். ஆளுமை உள்ள தலைவர் இல்லை என்று கூறுகிறார்கள்.

ரஜினி மட்டுமில்லை.. நானும் சொல்கிறேன்.. தமிழகத்தில் மிகப் பெரிய வெற்றிடம் இருக்கு.. பொன்னார்ரஜினி மட்டுமில்லை.. நானும் சொல்கிறேன்.. தமிழகத்தில் மிகப் பெரிய வெற்றிடம் இருக்கு.. பொன்னார்

நாம் இது தொடர்பாக கருத்து கூற முடியாது. இதற்கு மக்கள்தான் பதில் சொல்வார்கள். தேர்தல் நேரத்தில் மக்கள் இதற்கு பதில் கொடுப்பார்கள். அவர்கள் கையில்தான் முடிவு உள்ளது.

மக்கள் தீர்ப்புதான் மகேசன் தீர்ப்பு. அவர்கள்தான் தேர்தல் நேரத்தில் யார் சிறந்த தலைவர் என்று முடிவு செய்வார்கள். அவர்களிடமே முடிவை நான் விட்டுவிடுகிறேன், என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

English summary
People will give an answer for Rajinikanth interview says Premalatha Vijayakanth in Madurai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X