மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஈபிஎஸ் வந்தபோது மதுரை விமான நிலையத்தில் அனுமதியின்றி மேடை.. அதிமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு!

Google Oneindia Tamil News

மதுரை : மதுரை விமான நிலையத்தில் நேற்று எடப்பாடி பழனிசாமியை வரவேற்க அதிமுகவினர் அனுமதியின்றி மேடை அமைத்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை விமான நிலையத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக தொண்டர்கள் நேற்று பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினரால் விமான நிலையத்தில் முன் அனுமதி பெறாமல் மேடை அமைக்கப்பட்டு வரவேற்பு கொடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அனுமதியின்றி மேடை அமைத்தது, பிளக்ஸ் பேனர் வைத்தது தொடர்பாக அதிமுகவினர் 6 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏஏ.. மண்டை மேல இருக்கிற கொண்டையை மறந்தாரா எடப்பாடி பழனிசாமி?.. இப்படி ஒன்னு இருக்காமே.. அப்ப போச்சாஏஏ.. மண்டை மேல இருக்கிற கொண்டையை மறந்தாரா எடப்பாடி பழனிசாமி?.. இப்படி ஒன்னு இருக்காமே.. அப்ப போச்சா

முதன்முறையாக வந்த ஈபிஎஸ்

முதன்முறையாக வந்த ஈபிஎஸ்

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராகப் பதவி எற்ற பிறகு முதன் முறையாக நேற்று தென் மாவட்டங்களுக்கு வருகை தந்தார் எடப்பாடி பழனிசாமி. மதுரை, சிவகாசி ஆகிய இடங்களில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தார் எடப்பாடி பழனிசாமி. மதுரை விமான நிலையத்தில், அவருக்கு அதிமுக தொண்டர்கள் மலர்கள் தூவியும், மேலதாளங்கள் முழங்கவும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திடீர் மேடை

திடீர் மேடை

விமான விமான நிலையம் பயணிகள் வருகை வாயிலில் முன்பு அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்பி உதயகுமார், எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா ஆகியோர் ஏற்பாட்டில் திடீர் மேடை அமைக்கப்பட்டது. அதிமுகவினர் விமான நிலையத்தில் முன் அனுமதி பெறாமல் மேடை அமைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அனுமதியின்றி

அனுமதியின்றி

மதுரை விமான நிலையத்திற்கு வரும் முக்கிய பிரமுகர்களை, அந்தந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் வரவேற்பது வழக்கம். ஆனால் முதல் முறையாக அதிமுகவினர் மதுரை விமான நிலையத்தில் அனுமதியின்றி திடீர் மேடை அமைத்து எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளித்தனர். ஆனால் மதுரை விமான நிலைய அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் மேடை அமைத்து நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றதால் அதிகளவு அதிமுக தொண்டர்கள் கூடினர்.

அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு

அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி விமான நிலைய வளாகத்திற்குள் மேடை அமைத்து, பிளக்ஸ் பேனர் வைத்த விவகாரம் தொடர்பாக அதிமுகவினர் 6 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பாதுகாப்பு குளறுபடி

பாதுகாப்பு குளறுபடி

சமீபத்தில், நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது மதுரை விமான நிலையத்தில் காலணி வீசப்பட்ட விவகாரத்தின்போது, பாதுகாப்பு குளறுபடிகள் அம்பலமாகின. அமைச்சரும் இது தொடர்பாக குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் தான் மதுரை விமான நிலைய வளாகத்தில் அனுமதியின்றி பேனர், மேடை அமைத்த அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

English summary
ADMK cadres set up a stage to welcome Edappadi Palaniswami at the Madurai airport yesterday without prior permission. Avaniyapuram police has been registered against 6 members of AIADMK in connection with setting up a stage without permission and putting up a flex banner.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X