மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோவை எஸ்பி ஏன் அப்படி சொன்னார்.. பொள்ளாச்சி வீடியோக்கள் பரவாமல் தடுக்க வேண்டும்.. ஹைகோர்ட்

Google Oneindia Tamil News

Recommended Video

    பொள்ளாச்சி வீடியோக்கள் பரவாமல் தடுக்க உயர் நீதிமன்றம் கிளை உத்தரவு- வீடியோ

    மதுரை: பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் வன்கொடுமை தொடர்பான வீடியோக்களுக்கு மதுரை ஹைகோர்ட் அதிரடியாக தடை விதித்துள்ளது. மேலும் எஸ்பி பாண்டியராஜன் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் ஹைகோர்ட் கிளை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    தமிழகம் எங்கும் பொள்ளாச்சி சம்பவம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதன் பின்னணியில் அரசியல் தொடர்பு இருப்பதாக ஒரு பக்கமும், இந்த விவகாரத்தை அரசியலாக்கும் முயற்சி ஒரு பக்கமும் என கொளுந்துவிட்டு எரிகிறது.

    இதனிடையே அவ்வப்போது காமுகர்களிடம் சிக்கி தவித்த இளம்பெண்களின் வீடியோக்களும் வெளியிட்டு மக்களை உறைய வைத்து வருகிறது. இந்நிலையில், திருச்சியை சேர்ந்த வக்கீல் இளமுகில் மதுரை ஹைகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

    திருநாவுக்கரசு படத்தை துடைப்பம், செருப்பால் மாறி மாறி அடித்த மக்கள் அதிகார அமைப்பினர் திருநாவுக்கரசு படத்தை துடைப்பம், செருப்பால் மாறி மாறி அடித்த மக்கள் அதிகார அமைப்பினர்

    வீடியோக்கள்

    வீடியோக்கள்

    பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை சிபிஐக்கு மாற்றி பிறப்பித்த அரசாணையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், அடையாளம் என அனைத்தும் இடம்பெற்றுள்ளது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்பதால் பாலியல் வன்கொடுமை தொடர்பான வீடியோக்களை நீக்கி உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

     மதுரை ஹைகோர்ட்

    மதுரை ஹைகோர்ட்

    இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, பெண்கள் பாலியல் வன்கொடுமை தொடர்பான வீடியோக்களுக்கு மதுரை ஹைகோர்ட் அதிரடியாக தடை விதித்துள்ளது.

    சிபிஐ

    சிபிஐ

    பொள்ளாச்சி பெண்கள் வீடியோவை முற்றிலுமாக இணையதளத்தில் தடை செய்ய மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பொள்ளாச்சி வழக்கை சிபிஐ விசாரிக்க புதிய அரசாணையை வெளியிட தமிழக அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது

    பெண்கள்

    பெண்கள்

    இந்த உத்தரவுகளை பிறப்பிக்கும்போது, "பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிட்ட காவல் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை இருக்கும் என நீதிமன்றம் எதிர்பார்க்கிறது. நூற்றுக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

    ஏன் அப்படி சொன்னார்?

    ஏன் அப்படி சொன்னார்?

    ஆனால் 4 பேர்தான் பாதிப்பு என எப்படி எஸ்பி பாண்டியராஜன் ஏன் பேட்டி அளித்தார்? ஒருவேளை தவறான தகவல்களை எஸ்பி பாண்டியராஜன் தெரிவித்திருப்பின் அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனர்.

    English summary
    Madurai HC has ordered the TN government to issue a new G.O. in the Pollachi Video Case
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X