மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தகுதி நீக்க தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யவில்லை.. தினகரன் திடீர் பல்டி.. பரபரப்பு!

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை ஹைகோர்ட் தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய போவதில்லை என்று டிடிவி தினகரன் அறிவித்து இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மேல்முறையீடு செய்யவில்லை.. தினகரன் திடீர் பல்டி-வீடியோ

    மதுரை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை ஹைகோர்ட் தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய போவதில்லை என்று டிடிவி தினகரன் அறிவித்து இருக்கிறார்.

    கடந்த வாரம் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வந்தது. அதன்படி 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    Post 18 MLA disqualification: TTV Dinakaran side not going for appeal decides to face by-election

    இதனால் தினகரனை ஆதரவாளர்கள் 18 பேரும் அதிகாரப்பூர்வமாக தங்கள் எம்எல்ஏ பதவியை இழந்து இருக்கிறார்கள். இந்த தீர்ப்பை அடுத்து டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 18 பேரும் மேல்முறையீடு செய்ய முடிவு எடுத்து இருப்பதாக அறிவித்தனர். தகுதி நீக்க வழக்கில் சென்னை ஹைகோர்ட் தீர்ப்பிற்கு எதிராக சுப்ரீம் கோர்ட் செல்ல முடிவு எடுத்து இருப்பதாக அறிவித்தனர்.

    இந்த நிலையில் திடீர் திருப்பமாக 18 எம்எல்ஏக்கள் நீக்க வழக்கில் சென்னை ஹைகோர்ட் தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய போவதில்லை என்று டிடிவி தினகரன் அறிவித்து இருக்கிறார்.

    தகுதி நீக்க தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யவில்லை. தேர்தலை சந்திக்க தயார் என்று தினகரன் திடீர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

    Post 18 MLA disqualification: TTV Dinakaran side not going for appeal decides to face by-election

    நாங்கள் மேல் முறையீடு செய்ய மாட்டோம். 20 தொகுதிகளில் எப்போது தேர்தல் நடந்தாலும் சந்திப்போம். அதிமுக அங்கு டெபாசிட் வாங்க கூட முடியாது என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

    ரணில் வீட்டிற்கு கரண்ட் கட்.. சிறிசேனா அதிரடி நடவடிக்கை.. இலங்கையில் தொடரும் பரபரப்பு! ரணில் வீட்டிற்கு கரண்ட் கட்.. சிறிசேனா அதிரடி நடவடிக்கை.. இலங்கையில் தொடரும் பரபரப்பு!

    தினகரன் அறிவிப்பால் 18 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.ஏற்கனவே அதிமுக இடைத்தேர்தலுக்காகக் தேர்தல் நிர்வாகிகளை 20 தொகுதிகளில் நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Post 18 MLA disqualification: TTV Dinakaran side not going for appeal decides to face the by-election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X