மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுகவை போல் தமிழ்நாட்டை கட்டுப்படுத்த மோடி முயற்சி... கிருஷ்ணகிரியில் ராகுல் முழக்கம்

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: அதிமுகவை கட்டுப்படுத்தியது போல் தமிழகத்தையும் கட்டுப்படுத்த பிரதமர் மோடி நினைப்பதாக நினைப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

பெங்களூருவில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் கிருஷ்ணகரி வந்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிருஷ்ணகிரி வந்துள்ளார்.

கிருஷ்ணகிரிரியல் காங்கிரஸ் வேட்பாளர் செல்வக்குமார் மற்றும் தர்மபுரி திமுக வேட்பாளர் செந்தில்குமார் ஆகியோரை ஆதரித்து அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

 முதல் கட்ட வாக்குப் பதிவு.. 81 சதவீதத்துடன் திரிபுரா பெஸ்ட்.. பீகார்தான் இருப்பதிலேயே வொர்ஸ்ட்! முதல் கட்ட வாக்குப் பதிவு.. 81 சதவீதத்துடன் திரிபுரா பெஸ்ட்.. பீகார்தான் இருப்பதிலேயே வொர்ஸ்ட்!

 ராகுல் தாக்கு

ராகுல் தாக்கு

பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி பேசுகையில், அதிமுகவை போல் தமிழ்நாட்டையும் பிரதமர் மோடி கட்டுப்படுத்த முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். மேலும் தமிழர்களின் குரல் மத்தியில் ஓங்கி ஒலிக்கவில்லை என்றும் கூறினார். ஜிஎஸ்டி வரியால் வணிகங்கள் சீரழிந்து போய்விட்டதாகவும் ராகுல் குற்றம்சாட்டினார்.

மதுரை போகிறார்

மதுரை போகிறார்

கிருஷ்ணகிரி பிரச்சாரத்தை முடித்துவிட்டு சேலத்தில் மதிய உணவு சாப்பிடும் ராகுல் காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு பிற்பகல் 3.30 மணி அளவில் மதுரை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் தேனி செல்லும் ராகுல் காந்தி அங்கு காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.

 மதுரையில் ராகுல்

மதுரையில் ராகுல்

அதன்பின்னர் அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டரில் மதுரை செல்லும் ராகுல் காந்தி, மண்டேலா நகரில நடக்கும் பொதுக்கூட்டத்தில் செல்கிறார். அங்கு மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன், விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். பின்னர் மதுரையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

இன்று வரும் மோடி

இன்று வரும் மோடி

மக்களவை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், அதிமுக, பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு மதுரை வருகிறார்.இதற்காக கொச்சியில் இருந்து பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு விமானம் மூலம் இன்று இரவு 9 மணிக்கு மதுரை வருகிறார். பசுமலையில் உள்ள தாஜ் ஓட்டலில் தங்கும் அவர், நாளை காலை ஹெலிகாப்டர் மூலம் 11மணிக்கு தேனி செல்கிறார்.

 தேனியில் பிரதமர்

தேனியில் பிரதமர்

அங்கு ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் (தேனி வேட்பாளர்) மற்றும் மதுரை வேட்பாளர் ராஜ்சத்யன், திண்டுக்கல் தொகுதி பாமக வேட்பாளர் ஜோதி முத்து ஆகியோரை ஆதரித்து மோடி பிரச்சாரம் செய்கிறார். இந்த பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

 மோடி பிரச்சாரம்

மோடி பிரச்சாரம்

இதன் பின்னர் மோடி, ராமநாதபுரம் செல்கிறார். அங்கு சிவகங்கை பாஜக வேட்பாளர் எச்.ராஜா, ராமநாதபுரம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மதுரை வரும் மோடி, அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

 பாதுகாப்பு ஏற்பாடு

பாதுகாப்பு ஏற்பாடு

இரு பெரும் தலைவர்களும், மதுரைக்கு வருவதால், இங்கு உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையம், பசுமலை ஓட்டல் உள்பட பிரதமர் வந்து செல்லும் இடங்கள், ராகுல் வந்து செல்லும் மண்டேலா உள்ளிட்ட பகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

English summary
PM modi, rahul today visit in madurai , The city is surrounded by strong security
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X