மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழர்களின் பண்பாட்டையும்; கலாச்சாரத்தையும் பாதுகாப்பது எனது கடமை -ராகுல் காந்தி

Google Oneindia Tamil News

மதுரை: தமிழர்களின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பாதுகாப்பது தனது கடமை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Recommended Video

    மதுரை: தமிழர்களின் பாரம்பரியத்தை காப்பது தன் கடமை: மகிழ்ச்சி பொங்க தெரிவித்த ராகுல்!

    மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நேரில் பார்வையிட்ட அவர் அங்கிருந்து புறப்படுவதற்கு முன்னர் சில நிமிடங்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,

    Rahulgandhi says, It is my duty to preserve the Tamil culture

    ஜல்லிக்கட்டை நேரில் பார்த்தது தனக்கு ஒரு அழகான அனுபவமாக இருந்தது என்றும் ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்கும் அதில் ஆர்வமுடன் பங்கெடுத்த வீரர்களை பார்ப்பதற்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது எனத் தெரிவித்தார்.

    மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு சிறப்பான வசதிகள் செய்யப்பட்டிருந்ததாகவும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தி வருவதாகவும் பாராட்டு தெரிவித்தார்.

    ஜல்லிக்கட்டை ஆர்வமுடன் கண்டு ரசித்த ராகுல்காந்தி... மெய்க்காப்பாளரை தள்ளி நிற்குமாறு அறிவுறுத்தல்..!ஜல்லிக்கட்டை ஆர்வமுடன் கண்டு ரசித்த ராகுல்காந்தி... மெய்க்காப்பாளரை தள்ளி நிற்குமாறு அறிவுறுத்தல்..!

    தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை நேரில் பார்ப்பதற்காக தான் தாம் ஜல்லிக்கட்டை காண வந்ததாகவும் தமிழகமும், தமிழ் கலாச்சாரமும் இந்தியாவின் எதிர்காலத்துக்கு மிகவும் அவசியமானது எனக் கூறினார். மேலும், தமிழ் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தனக்கு உள்ளதாக கூறி தனது உரையை நிறைவு செய்தார் ராகுல்காந்தி.

    Rahulgandhi says, It is my duty to preserve the Tamil culture

    ராகுல்காந்தி ஆங்கிலத்தில் பேசியதை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மொழிமாற்றம் செய்து பேசினார். இதனிடையே ராகுல் பேசிய ஆங்கிலம் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையிலான எளிய நடையில் இருந்ததால் அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே அதை புரிந்துகொண்டு கரவொலி எழுப்பி தங்கள் வரவேற்பை தெரிவித்தனர் பொதுமக்கள்.

    ராகுல்காந்தி தனது வழக்கமான வெள்ளை நிற குர்தா ஆடையை தவிர்த்து டி-ஷர்ட், ஜீன்ஸ் சகிதமாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Rahulgandhi says, It is my duty to preserve the Tamil culture
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X