மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதுரை குலுங்க, குலுங்க.. செம மழை.. நான்கு மாசி வீதிகளிலும் வெள்ளம்

Google Oneindia Tamil News

மதுரை: மதுரையில் வெளுத்து வாங்கும் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    மதுரை குலுங்க, குலுங்க.. செம மழை.. நான்கு மாசி வீதிகளிலும் வெள்ளம்

    மதுரையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில நாட்கள் நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    தீபாவளிக்கு முதல் நாள் தொடங்கி தற்போது இன்று வரை மதுரையில் மழை வெளுத்து வாங்குகிறது. இன்று காலையில் தொடங்கிய மழையினால் மதுரை பெரியார் பஸ் டாண்ட், வடக்கு மாசி வீதி, உள்பட 4 மாசி வீதிகளிலும் தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கி ஆறாக காட்சியளிக்கிறது.

    Rain pouring in Madurai city since morning

    சாலைகளிலும் பெருக்கெடுத்து தண்ணீர் செல்வதாலும், தொடர் மழையின் காரணமாகவும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளானார்கள். மேலும் வாகனங்களில் தண்ணீர் புகுந்து ஸ்டார்ட் ஆகாமல் நிறுத்தப்பட்டுள்ளன.

    Rain pouring in Madurai city since morning

    இதேபோல மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவ மழையின் தீவிரம் காரணமாக மேலும் சில நாட்கள் இந்த மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    2021 எப்போ பிறக்கும்.. ஆர்வத்தோடு காத்திருக்கும் மக்கள்.. காரை எடுத்துகிட்டு விர்ருன்னு கிளம்ப ரெடி!2021 எப்போ பிறக்கும்.. ஆர்வத்தோடு காத்திருக்கும் மக்கள்.. காரை எடுத்துகிட்டு விர்ருன்னு கிளம்ப ரெடி!

    இதனிடையே தெற்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள, குறைந்த காற்றழுத்த நிலை காரணமாக, மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    English summary
    The normal life of the people in Madurai has been severely affected by the continuous rains. According to the Meteorological Department, it will continue for a few days.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X