மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெரியார் குறித்து ரஜினி சர்ச்சை.. ஏன் துக்ளக்கை காட்டவில்லை.. உண்மை இல்லை என்று அர்த்தம்.. வீரமணி

Google Oneindia Tamil News

மதுரை: பெரியாரை கொச்சைப்படுத்தியவர்கள் காணாமல் போய் உள்ளனர். ஆனால் பெரியார் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார் என திராவிடர் கழக தலைவர் கி வீரமணி தெரிவித்துள்ளார்.

மதுரை ஹார்விபட்டியை சேர்ந்த மறைந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ராமசாமி என்பவரின் உடலை மதுரை அரசு மருத்துவகல்லூரிக்கு ஆராய்ச்சிக்காக தானம் வழங்கும் நிகழ்வில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டார்.

 Rajinikanth spoke about Periyar, why he did not show Tughlaq : veeramani

அப்போது அவர் பேசுகையில், நீட் தேர்வால் 8 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது, நீட் ரத்து செய்ய பட வேண்டும், மத்திய கல்வி கொள்கையை மத்திய அரசை விட விரைவாக செயல்படுத்தி மத்திய அரசுக்கு ராஜ விசுவாசமாக தமிழக அரசு செயல்படுத்துகிறது.

5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். மத்திய மாநில அரசு நீட் தேர்வை கைவிட வேண்டும். மாணவர்களுக்கு தேர்வு என்ற மன அழத்தம் தரும் நடைமுறையை அரசு திரும்ப பெற வேண்டும்.

காஷ்மீர் பிரச்சனை.. பஞ்சாயத்து பண்ண ரெடி.. மீண்டும் வாயை திறந்த டிரம்ப்.. இந்தியா சரியான பதிலடிகாஷ்மீர் பிரச்சனை.. பஞ்சாயத்து பண்ண ரெடி.. மீண்டும் வாயை திறந்த டிரம்ப்.. இந்தியா சரியான பதிலடி

பெரியார் குறித்து பேசிய விவகாரத்தில் ரஜினி மன்னிப்பு கேட்க முடியாது என்கிறார். மன்னிப்பு கேட்பது என்பது மனித பண்பாட்டின் பெருந்தன்மை, ரஜினி பெரியார் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை பேசியுள்ளார். ஆனால் ரஜினி நீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டிய நிலையில் உள்ளார்.

பெரியார் குறித்து நடிகர் ரஜினி பேசியபோது ஆதாரமாக துக்ளக்கை ஏன் காட்டவில்லை. அதில் உண்மை இல்லை என்பது தான் அர்த்தம், பெரியாரை கொச்சைப்படுத்தியவர்கள் ஆயிரமாயிரமாய பேர் காணாமல் போய் உள்ளனர் ஆனால் பெரியார் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்" என்றார்.

English summary
dravidar kazhagam veeramani says When Rajini spoke about Periyar, why he did not show Tughlaq magazine
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X