மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மூலிகை பெட்ரோலுக்கு கார்ப்பரேட் எதிர்ப்பு கிடையாது.. மத்திய அமைச்சர்கள் சிலர்தான்..ராமர் பரபர பேச்சு

Google Oneindia Tamil News

மதுரை: மூலிகை பெட்ரோலுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மத்திய அமைச்சர்கள் சிலரே எதிர்க்கிறார்கள் என மதுரையில் மூலிகை எரிபொருள் கண்டுபிடிப்பாளர் ராமர்பிள்ளை பேட்டி அளித்துள்ளார்.

Recommended Video

    Ladakh-ல் எரிபொருள் பிரச்சினை | Ramar Pillai-யை அழைத்த Indian Army

    கழிவு நீர் மூலமும், விவசாய கழிவுகளைக் கொண்டும் பயோ டீசல், பயோ பெட்ரோல், பயோ சமையல் எரிவாயு தயாரித்த ராமர்பிள்ளை மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், கேரளா அரசு மூணாறு பகுதியில் 1600 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து கொடுத்து மூலிகை பெட்ரோல் உற்பத்தியை உருவாக்க அனுமதி அளித்துள்ளதால் வரும் 10ஆம் தேதி முதல் உற்பத்தியை தொடங்குகிறோம்.

    அப்படியா.. துரைமுருகனுக்கு போன் போட்டாரா முக. அழகிரி.. டி.ஆர்.பாலுவை மட்டும் வாழ்த்தலயாமே.. உண்மையா?அப்படியா.. துரைமுருகனுக்கு போன் போட்டாரா முக. அழகிரி.. டி.ஆர்.பாலுவை மட்டும் வாழ்த்தலயாமே.. உண்மையா?

    மத்திய புலனாய்வு துறை

    மத்திய புலனாய்வு துறை

    மூலிகை பெட்ரோல்கள் குறித்து தவறான தகவலை பரப்பி வருகின்றனர். மூலிகை எரிபொருட்கள் என் மீது தொடரப்பட்ட வழக்கில் மத்திய புலனாய்வு துறையில் போதிய ஆதாரத்தை நிரூபிக்க இயலாத நிலையில் நீதிமன்றம் என்னை விடுவித்த நிலையில் மத்திய புலனாய்வுதுறை என் கண்டுபிடிப்பு குறித்து தவறான தகவலை பரப்பிவருகிறது.

    பிரச்சினை

    பிரச்சினை

    லடாக் பகுதியில் எரிபொருள் நிரப்புவதில் உள்ள பிரச்சனையை தீர்க்க இந்திய ராணுவம் என்னை அழைத்த நிலையில் சாதாரண டீசலை விட பயோ டீசல் வீரியம்மிக்கது என்பதை ராணுவத்தினர் ஒப்புகொண்டுள்ளனர் என்றார். வரும் 9-ஆம் தேதி மதுரையில் செய்தியாளர்கள் முன்னிலையில் மூலிகை பெட்ரோலை உருவாக்கி காட்டவுள்ளோம்.

    மூலிகை எரிப்பொருள்

    மூலிகை எரிப்பொருள்

    ஆடிட்டர் குருமூர்த்தி உதவுவதாக சொல்லிய நிலையில் மூலிகை எரிபொருட்களை தயாரிக்க தொடங்கினேன். சிபிஐ தவறாக வழக்குப் பதிவு செய்துள்ளதாக குரூமூர்த்தியே கூறியுள்ளார். என்னுடைய மூலிகை பெட்ரோலில் கெமிக்கல் கலக்கவில்லை என்பதை நீதிமன்றமே நிரூபித்துள்ளது. இந்தியாவை முன்னேற்ற பயோ பெட்ரோல் தயாரிப்பை தவிர வேறு வழியில்லை.

    தமிழகத்தில்

    தமிழகத்தில்

    கேரளாவில் 77 பகுதிகளில் மூலிகை பெட்ரோல் உற்பத்தியை தொடங்கவுள்ளோம். தமிழகத்தில் பயோ பெட்ரோல் தயாரிப்பது குறித்து முதல்வரிடம் அனுமதி கேட்கவுள்ளோம், எனது கண்டுபிடிப்பிற்கு கார்ப்பரேட் எதிர்ப்பு கிடையாது. மத்திய அமைச்சர்கள் சிலர் தடுக்கின்றனர்.

    கேரளாவில் வரி

    கேரளாவில் வரி

    மூலிகை எரிபொருட்களை கேரளாவில் வரியுடன் சேர்த்து டீசல், பெட்ரோல் விலை 39 ரூபாய்க்கு கொடுப்போம், பயோ கேஸ் 16 லிட்டர் ரூ.250 க்கு வழங்கவுள்ளோம். தமிழகத்தில் தயாரிக்கும் போது பெட்ரோல் ஒரு லிட்டர் 20ரூபாய் விற்பனை செய்யவுள்ளோம். என்னுடைய கண்டுபிடிப்பை என் தாயிற்கு சமர்ப்பிக்கிறேன் என்றார்.

    English summary
    Ramar Pillai says some of union ministers opposing my herbal petrol. No Corporate opposes it.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X