மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காரை விற்கமாட்டேன்.. அடுத்த ஜல்லிக்கட்டிலும் பங்கேற்க மாட்டேன்.. 16 காளைகளை அடக்கிய ரஞ்சித்

Google Oneindia Tamil News

மதுரை: மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பரிசாக கிடைத்த காரை விற்க மாட்டேன் என 16 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த இளைஞர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த போட்டியில் 739 காளைகள் களமிறங்கின. மொத்தம் 688 வீரர்கள் களத்தில் இருந்து காளைகளை அடக்க முயன்றனர்.

இதில் காளை தாக்கியதில் 36 பேர் காயமடைந்தனர். அது போல் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த ஒருவரும் மயக்கமடைந்து உயிரிழந்தார்.

காணும் பொங்கல்.. சென்னையில் சுற்றுலா தலங்களில் அலை மோதியது மக்கள் கூட்டம்காணும் பொங்கல்.. சென்னையில் சுற்றுலா தலங்களில் அலை மோதியது மக்கள் கூட்டம்

மூன்றாவது பரிசு

மூன்றாவது பரிசு

இந்த நிலையில் மாலை 5 மணி அளவில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவடைந்தன. அப்போது முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் அறிவிக்கப்பட்டன. இதில் மாறநாடு குளமங்கலம் காளை முதலிடம் பிடித்தது. இரண்டாம் இடம் புதுகை எஸ்ஐ அனுராதாவின் காளைக்கும் மூன்றாவது பரிசு ஜிஆர் கார்த்திக்கின் காளைக்கும் வழங்கப்பட்டது.

2 மற்றும் 3ஆவது இடம்

2 மற்றும் 3ஆவது இடம்

அது போல் ஒரே சுற்றில் 16 காளைகளை அடக்கிய ரஞ்சித் குமார் முதலிடம் பிடித்தார். 14 காளைகளை அடக்கி அழகர்கோவில் கார்த்திக் 2ஆவது இடமும், 13 காளைகளை அடக்கிய அரிடாப்பட்டி கணேசன் 3ஆவது இடத்தையும் பிடித்தனர்.

முதல்வர் பரிசு

முதல்வர் பரிசு

இதில் முதலிடம் பிடித்த ரஞ்சித் குமாருக்கு ஒரு காரும், 4 கறவை மாடுகளும் பரிசாக வழங்கப்பட்டன. கார் பரிசை சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரஞ்சித்துக்கு வழங்கவுள்ளார். இதுகுறித்து ரஞ்சித் குமார் கூறுகையில், பரிசாக கிடைக்கும் காரை விற்க மாட்டேன்.

கார் விற்பனை

கார் விற்பனை

அது போல் அடுத்த ஜல்லிக்கட்டிலும் பங்கேற்க மாட்டேன் என கூறியுள்ளார். கடந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 15 காளைகளை அடக்கி ரஞ்சித்குமாரின் சகோதரர் ராம்குமார் முதலிடம் பிடித்து காரை பரிசாக பெற்றார். ஆனால் அவரது வீட்டில் காரை நிறுத்த இடமில்லாததால் அதை விற்பனை செய்து விட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Madurai Alanganallur winner Ranjith says that I will not sale the car and i will not participate in next year Jallikattu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X