மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கப்பலூர் டோல்கேட் தேவையில்லை! போராட்டத்தில் குதித்த ஆர்.பி.உதயகுமார் கைது! போலீஸ் குவிப்பு, பரபரப்பு

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி எதிர்த்து போராடிய ஆர்.பி உதயகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

மதுரை: மதுரை கப்பலூர் டோல்கேட்டை அகற்றக்கோரி சாலையில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Recommended Video

    கப்பலூர் டோல்கேட் தேவையில்லை! போராட்டத்தில் குதித்த ஆர்.பி.உதயகுமார் கைது!

    திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி சர்ச்சைக்குரிய வகையில் தினமும் பிரச்சினை நடைபெற்று வருகிறது. மேலும் திருமங்கலம் நகர் பகுதி அருகில் இருப்பதால் திருமங்கலம் நகர் பகுதியில் இருந்து வரும் வாகனங்களுக்கும், கப்பலூர் வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.

    விடிந்தும் விடியாமலும் வந்து நின்ற அமைச்சர் செந்தில் பாலாஜி! பதறியடித்து ஓடிவந்த திமுகவினர்! விடிந்தும் விடியாமலும் வந்து நின்ற அமைச்சர் செந்தில் பாலாஜி! பதறியடித்து ஓடிவந்த திமுகவினர்!

    இந்த விவகாரத்தில் பலமுறை சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவ்வப்போது கட்டணம் வசூலிப்பதை நிறுத்தி விட்டு மீண்டும் திருமங்கலம் நகரில் இருந்து வரக்கூடிய வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் முயற்சியில் சுங்கச்சாவடி நிர்வாகம் இறங்குவதால், தொடர்ந்து கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கும், ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் நிலை உள்ளது.

    கப்பலூர் சுங்கச்சாவடி

    கப்பலூர் சுங்கச்சாவடி

    கப்பலூர் சுங்கச்சாவடியை கடந்துதான் நெல்லை, குமரி போன்ற தென் மாவட்டங்களில் இருந்து மதுரைக்கு வருகின்ற அனைத்து வாகனங்களும் வருகின்றன. இதுபோல் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி போன்ற பகுதிகளில் இருந்தும் வாகனங்கள் மதுரைக்கு வந்து செல்கின்றன. இந்த சுங்கச்சாவடியில் திருமங்கலம், கல்லுப்பட்டி, பேரையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதாக தெரிய வருகிறது. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சுங்கச்சாவடியில் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரு தினங்களுக்கு முன்பு உள்ளூர் வாகனத்திற்கு கட்டணம் கேட்டதால் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டு அதன் பின்னர் சுங்கச்சாவடி நிர்வாகம் சமாதானமாகி கட்டண வசூலிக்காமல் வாகனத்தை அனுப்பி வைத்தது. தற்போது மேலும் ஒரு பிரச்சினை உருவாகி உள்ளது.

    அடிக்கடி போராட்டம்

    அடிக்கடி போராட்டம்

    கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகம் இணைப்பு சாலைகளை ஆக்கிரமிப்பு செய்து வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு செய்துள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், சாலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கப்பலூர் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தலைமையில் சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

    பொதுமக்கள் போராட்டம்

    பொதுமக்கள் போராட்டம்

    கப்பலூர் பகுதியில் சுங்கச்சாவடி அமைக்கும்போதே எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் சுங்கச்சாவடி ஒப்பந்தகாரர்கள் உள்ளூர் பகுதி மக்களுக்கு கட்டண சலுகைகள் அளிக்கப்படும் என கூறினர். ஆனால் உள்ளூர் மக்களுக்கு இதுவரை எந்தவித கட்டண விலக்கும் அளிக்கவில்லை. ஒவ்வொரு முறை போராட்டம் நடத்தும் போதும் கட்டண விலக்கு அளிக்கப்படுவதாக அதிகாரிகள் உறுதி அளிக்கின்றனர். ஆனால் அது தீர்வு கிடைக்காத தொடர்கதையாக மாறி வருகிறது. நான்கு வழிச்சாலையை பயன்படுத்தாத வாகன ஓட்டிகளிடமும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால், கிராமப்புறங்களில் இருந்து வாகனங்களில் காய்கறிகளை ஏற்றிக் கொண்டு மதுரைக்கு வரும் வாகனங்களுக்கு கூட கட்டணம் வசூலிக்கிறார்கள் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை

    ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை

    நேற்றைய தினம் திருமங்கலம் மற்றும் கப்பலூர் பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தலைமையில் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் இணைப்பு சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கப்பலூர் சுங்கச்சாவடி

    கப்பலூர் சுங்கச்சாவடி

    மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் நேரில் வந்து கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரம் குறித்து கேட்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அப்போது உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது. அங்கு ஒரு போலீசாரை நிறுத்தி பிரச்சினை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    அமைச்சர் ஆர்.பி உதயகுமார்

    அமைச்சர் ஆர்.பி உதயகுமார்

    இந்த நிலையில் மதுரை கப்பலூர் டோல்கேட்டை அகற்றக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. இன்று திடீரென கப்பலூர் டோல்கேட் அருகே இன்றைய தினம் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். இதை அறிந்த காவல்துறையினர் உடனடியாக அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். அந்த பகுதியில் இருந்த அதிமுக தொண்டர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் 200க்கும் மேற்பட்டோர் தங்கள் ஆதரவை தெரிவித்து கடும் வெயிலையும் பொருட்படுத்தாது டோல்கேட் அருகே உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.

    குண்டு கட்டாக கைது

    குண்டு கட்டாக கைது

    காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லாததால் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அவருடன் உண்ணாவிரதம் இருந்த உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.மற்றும் 200க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர். சாலையில் அமர்ந்து உண்ணாவிரதப்போராட்டம் நடத்த அனுமதி இல்லாத காரணத்தால் காவல்துறை அனுமதி இல்லாததால் காவல்துறையினர் குண்டு கட்டாக கைது செய்தனர்

    English summary
    Police arrested former minister and Thirumangalam Constituency MLA RB Udayakumar who protested with the public to remove the Kappalur Toll Gate.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X