• search
மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ரீவைண்ட் 2020.. 79 வயதில் பஞ்சாயத்து தலைவர் முதல் மாஸ்க் பரோட்டா வரை.. மதுரை டாப் 10

|

மதுரை: பசியோடு வந்தால் இட்லி ,பாசத்தோடு வந்தால் மல்லிகை ,பக்தியோடு வந்தால் கோயில் நிறைந்த மதுரையில் இவ்வருடம் முழுதும் நிகழ்ந்த சம்பவங்களை முதல் 10 என வரிசைப்படுத்தி பார்க்கலாம்.

  ரீ வைண்ட் 2020... மதுரை டாப்-10!

  மதுரை மாவட்டத்தில் டாப் 10 இடங்களில் இருக்கும் சம்பவங்கள் பின்வருமாறு:

   Rewind 2020- Top 10 incidents happened in Madurai district

  1. 79 வயதில் பஞ்சாயத்து தலைவரான மூதாட்டி உள்ளார். 60 வயதுக்கு மேல் அரசியலில் நின்றாலே, இவர்கள் இந்த வயதில் வந்து என்ன செய்யப்போகிறார்கள் என்று கிண்டல் செய்யும் மக்கள் மத்தியில் இருமுறை முயன்று தோற்று மூன்றாவது முறையாக வெற்றியை ருசித்தார்.

  2. மதுரையை சேர்ந்த வீரம்மாள் காளைகளை அடக்கி கார் வென்ற ரஞ்சித் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். ஜல்லிக்கட்டு என்றாலே அது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தான் அதில் கலந்து கொண்டு 16 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் ரஞ்சித்துக்கு சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரும், துணை முதல்வரும் காரை பரிசாக வழங்கினர்.

  3. கொரோனாவுக்கு தமிழகத்தில் முதல் பலி, மதுரையில் பதிவானது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர் மரணமடைந்தார்.

  4. டிரோனைக் கண்டதும் தெறித்து ஓடிய மதுரைக்காரைய்ங்க!

  கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக போடப்பட்ட 144 தடை உத்தரவையடுத்து மதுரை மாவட்டத்தில் பொதுமக்களின் நடமாட்டத்தை கண்டறிய ட்ரோன் கேமிராவை பயன்படுத்திய போது வெளியில் நடமாடிய இளைஞர்கள் சிலர் லுங்கியை எடுத்து முகத்தை மூடி சென்றது செம வைரல் ஆனது

  5. கொரோனா தொற்றால் மக்கள் வெள்ளத்தில் நடக்கும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாணம் பக்தர்கள் இன்றி நடைபெற்றது. நேரடியாக கோயிலுக்கு சென்று மீனாட்சி திருக்கல்யாணத்தை காண முடியாவிட்டாலும் கோவில் இணையதளத்திலும் தொலைக்காட்சியிலும் மக்கள் பார்த்து பக்தி பரவசத்தில் திளைத்தனர்.

  6. திருப்பரங்குன்றம் கோயில் யானை மிதித்ததால் பாகன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்
  ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் யானை தெய்வானை ஆக்ரோசபட்டு காளிமுத்து என்ற பாகனை மிதித்தது. அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

   ரீவைண்ட் 2020.. கிணற்றில் குதித்த கைதி முதல் பணக்கார லிஸ்டில் இடம்பெற்ற டாக்டர் வரை.. ஈரோடு டாப் 10 ரீவைண்ட் 2020.. கிணற்றில் குதித்த கைதி முதல் பணக்கார லிஸ்டில் இடம்பெற்ற டாக்டர் வரை.. ஈரோடு டாப் 10

  7. யாசகம் பெற்று அரசுக்கு நிதி கொடுத்த யாசகர் பூல்பாண்டியன். மதுரையில் பொதுமக்களிடம் 4-வது முறையாக யாசகம் பெற்று அரசுக்கு கொரோனா நிதி சேகரித்து கொடுத்தார் யாசகர் பூல் பாண்டியன். அவரின் சேவையை அனைத்து தரப்பினரும் பாராட்டினர். ஆண்டுதோறும் காமராஜர் பிறந்தநாளான கல்வி வளர்ச்சி நாளில் பள்ளிகளுக்கு உதவிசெய்வதை வழக்கமாக கொண்ட பூல்பாண்டியன் தற்போது கொரோனா லாக்டவுனால் பாதிக்கப்படும் ஏழை எளியோருக்கு உதவும் வகையிலான நிதி வழங்கிவருவதாக தெரிவித்தார்.

  8. 10 ரூபாய் இருந்தா போதும் பசியாற சாப்பாடு போட்ட ராமு தாத்தா காலமானார். மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே சிறிய பெட்டிக்கடை நடத்தி பத்து ரூபாய்க்கு உணவு வழங்கி, மதுரை மக்களின் இதயத்தில் மட்டும் இல்லாது அந்த பேருந்து நிலையத்திற்கு வந்து செல்பவர்களின் மனதிலும் இடம் பிடித்தவர் ராமு தாத்தா.

  9. கண்கள் இருண்டாலும்... தன்னம்பிக்கை இருளவில்லை... ஐ.ஏ.எஸ்.தேர்வில் வெற்றிகண்ட பூர்ணசுந்தரி. மதுரை சிம்மக்கல் அருகே உள்ள மணிநகரம் பகுதியை சேர்ந்த பார்வை குறைபாடுடைய 25 வயது இளம்பெண் பூர்ண சுந்தரி தனது விடாமுயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தார்

  10. இறுதியா கைலாசா போறோம் என கிளம்பிய மதுரைவாசிகள்!
  கைலாசா நாட்டின் அதிபர் எவர் கிரின் சர்ச்சை மன்னன் நித்யானந்தாவின் கைலாசாவில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கொடுக்க வேண்டும். கைலாசா நாட்டில் ஓட்டல் வைக்க அனுமதி தேவை, மாஸ்க் பரோட்டா முதல் கொரோனா தோசை வரை சுட்டுக்கொடுத்து பக்தர்களை கவர்வேன் என மதுரைவாசிகள் கடிதம் எழுதினர்.

  இந்த 10 சம்பவங்கள்தான் 2020-ஆம் ஆண்டு முழுவதும் மதுரை மாவட்ட மக்களை சுவாரஸ்யபடுத்தி வந்தது.

  English summary
  Madurai Rewind Top 10: Here are the 10 incidents which makes Madurai people more interesting.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X