மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாத்தான்குளம் வழக்கு...தந்தை மகன் உடலில் காயங்கள்...சிபிஐ அதிர்ச்சித் தகவல்!!

Google Oneindia Tamil News

மதுரை: சாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ் உடலில் 17 இடங்களிலும், அவரது மகன் பென்னிக்ஸ் உடலில் 13 இடங்களிலும் காயங்கள் இருந்ததாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில் சிபிஐ தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு இந்தியா அளவில் பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

Sathankulam Case Update:CBI has revealed shocking news about P Jayaraj and his son Bennicks

இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் அறிக்கை தாக்கல் செய்திருந்த சிபிஐ, ''சாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ் உடலில் 17 இடங்களிலும், அவரது மகன் பென்னிக்ஸ் உடலில் 13 இடங்களிலும் காயங்கள் இருந்ததாக தெரிவித்துள்ளது''

மேலும், தகவல்.சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான முருகன், தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜாவின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரையும் சாத்தான் குளம் போலீசார் கடுமையாக தாக்கி இருந்தனர். கடுமையாக தாக்கப்பட்டதால் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

முன்னதாக, இந்த வழக்கை விசாரிக்குமாறு கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசனுக்கு உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டு இருந்தது. இதன்பேரில், விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், "விடிய விடிய தந்தை, மகனை போலீசார் தாக்கியதாக பெண் போலீஸ் ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இவர் இந்த சம்பவத்தை நேரடியாக பார்த்தவர். அவர்களை கடுமையாக அடித்ததில் லத்தி மற்றும் டேபிளில் ரத்தக்கறைகள் படிந்துள்ளன. மேலும், போலீஸ் நிலையத்தில் இருக்கும் சிசிடிவி கேமரா பதிவுகள தானாக அழிந்துவிடுமாறு செட்டிங் மாற்றம் செய்யப்பட்டு இருந்ததாகவும், குறிப்பிட்டு இருந்தார்.

ரஷ்யாவில் கொரோனா தடுப்பு மருந்து...நம்பிக்கை அளித்த மேலும் ஒரு மருந்து!!ரஷ்யாவில் கொரோனா தடுப்பு மருந்து...நம்பிக்கை அளித்த மேலும் ஒரு மருந்து!!

இந்த சம்பவம் தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. குற்றவாளிகளை கண்டறிந்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்ற குரல் ஒலித்தது. இந்த நிலையில் வழக்கை தமிழக அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றியது.

வழக்கை விசாரித்த சிபிஐ குற்றம் சாட்டப்பட்டு இருந்த சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன் உள்ளிட்ட 10 பேரை இதுவரை கைது செய்துள்ளது. அவர்கள் மீது கொலை, தடயங்களை அழித்தல் உட்பட மொத்தம் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.

இந்த நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் சாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ் உடலில் 17 இடங்களிலும், அவரது மகன் பென்னிக்ஸ் உடலில் 13 இடங்களிலும் காயங்கள் இருந்ததாக சிபிஐ தெரிவித்துள்ளது. இந்த தகவல்கள் மேலும் அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த எஸ்.ஐ. பால்துரைக்கு கடந்த மாதம் 24ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 8ம் தேதி அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பால்துரை உயிரிழந்தார்.

English summary
Sathankulam Case Update:CBI has revealed shocking news about P Jayaraj and his son Bennicks
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X