மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாத்தான்குளம்: கைதான போலீஸ்காரர்கள் முத்துராஜ், முருகனுக்கு கொரோனா.. மதுரை ஜெயிலில் பரபரப்பு!

கைதான காவலர்கள் முருகன், முத்துராஜுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

மதுரை: சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் மதுரை ஜெயிலில் உள்ள போலீஸ்காரர்கள் முருகனுக்கும், முத்துராஜுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி, விசாரணை செய்யுமாறு கோர்ட் உத்தரவிட்டது... இதையடுத்து, இந்த வழக்கினை சிபிசிஐடி விசாரணை செய்தது.

 sathankulam: cops murugan and muthuraj tests postive for corona in madurai prison

அப்போது, கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், எஸ்ஐ பாலகிருஷ்ணன், தலைமைகாவலர் முருகன், சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், அந்த சாத்தான்குளம் ஸ்டேஷனில் பணியாற்றிய 5 போலீசாரும் கைது செய்யப்பட்டனர்.. அந்த 5 போலீசாரையும் காவலில் எடுத்து தனித்தனியாக விசாரிக்கப்பட்டது.. அவர்களிடம் வாக்குமூலமும் பெறப்பட்டது.. இப்போது அவர்கள் ஜெயிலில் உள்ளனர்.. சிபிஐயிடம் வழக்கு சென்றுள்ளதால் துரித விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில், கைதாகி மதுரை ஜெயிலில் உள்ள போலீஸ்காரர்கள் முருகன், முத்துராஜா ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது... 2 நாளைக்கு முன்னாடிதான் எஸ்எஸ்ஐ பால்துரைக்கு தொற்று உறுதியானது.. பால்துரைக்கு தொற்று இருந்ததால், இந்த வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகள் 6 பேருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவால் மூடப்பட்ட பள்ளி.. வகுப்பறைக்குள் கேட்ட விநோத சத்தம்.. எட்டிப் பார்த்தவர்களுக்கு அதிர்ச்சிகொரோனாவால் மூடப்பட்ட பள்ளி.. வகுப்பறைக்குள் கேட்ட விநோத சத்தம்.. எட்டிப் பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி

அவர்கள் மதுரை ரயில்வே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு கழுத்து வலி என்பதால் சிகிச்சை நடந்து வருகிறது. இதையடுத்து, முருகன், முத்துராஜாவுக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டது.. அந்த டெஸ்ட் முடிவுகளில் 2 பேருக்குமே தொற்று உறுதியாகி உள்ளது... ஏற்கனவே மதுரையில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது.. அதனால்தான் அங்கு லாக்டவுனும் போடப்பட்டது..

Recommended Video

    சாத்தான்குளம் வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும் - ஐநா கோரிக்கை

    மதுரையில் அதிகரித்து வரும் கொரோனா பரவலின் விளைவாகவே இந்த சூழல் உருவாகியுள்ளது என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல, இவர்களுக்கு தொற்று உறுதியாகி இருப்பதால், மதுரை ஜெயிலில் உள்ள மற்ற கைதிகளையும் பாதித்திருக்குமோ என்ற கலக்கமும் எழுந்துள்ளது.. முருகன், முத்துராஜாவுக்கு தொற்று உறுதியானதை அடுத்து, மதுரை ஜெயிலில் தேவையான பாதுகாப்பு பணிகளை சுகாதார துறையினர் கையில் எடுத்துள்ளனர்.

    English summary
    sathankulam: cops murugan and muthuraj tests postive for corona in madurai prison
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X