மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாத்தான்குளம் படுகொலை.. ‘போலீசாருக்கு மன அழுத்தம்’.. சூ-மோட்டோ வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட் கிளை!

Google Oneindia Tamil News

மதுரை : சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்த வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், கஸ்டடி மரண வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

சூமோட்டோ வழக்கு விசாரணையின்போது, காவல்துறையினருக்கான மனநல புத்தாக்க பயிற்சிகள் முறையாக நடைபெற்று வருவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

4,484 காவல்துறையினர் மன அழுத்தத்தில் இருப்பதை கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சென்னையில் சாத்தான்குளம் சம்பவம்? காவல்நிலையத்தில் மரணமடைந்த இளைஞர்! சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு சென்னையில் சாத்தான்குளம் சம்பவம்? காவல்நிலையத்தில் மரணமடைந்த இளைஞர்! சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு

சாத்தான்குளம் கொடூரம்

சாத்தான்குளம் கொடூரம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது வணிகர்களான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோருடன் கடை அடைப்பது தொடர்பான வாக்குவாதத்தில் ஈடுபட்ட போலீசார், அவர்கள் இருவரையும் காவல்நிலையம் அழைத்துச் சென்று இரவு முழுவதும் கொடூரமாக அடித்து சித்ரவதை செய்தனர். இதனால், கோவில்பட்டி சிறையில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

சூமோட்டோ வழக்கு

சூமோட்டோ வழக்கு

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் சாத்தான்குளம் காவல்நிலைய போலீசார் கைது செய்யப்பட்டனர். ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து, வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது. இந்த வழக்கில் போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்க பயிற்சி அளிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு பரிந்துரைகளை நீதிபதிகள் வழங்கினர்.

இன்று விசாரணை

இன்று விசாரணை

இந்த சூமோட்டோ வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. தமிழக உள்துறை செயலர், டிஜிபி ஆகியோர் காணொலி வழியாக ஆஜராகி தமிழகத்தில் காவலர் நல்வாழ்வு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக தெரிவித்தனர். தமிழக அரசு சார்பில் பதில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

அரசு பதில் மனு

அரசு பதில் மனு

தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், காவலர் நல்வாழ்வு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 1.2 லட்சம் போலீசாருக்கு மன அழுத்தத்தை போக்கும் பயிற்சிக்காக பெங்களூர் நிமான்ஸ் மருத்துவமனையுடன் 3 ஆண்டுகள் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பயிற்சிக்காக 2018-ல் ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கோப மேலாண்மை உள்ளிட்ட 12 தலைப்புகளின் கீழ் போலீசாருக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் நிமான்ஸ் மருத்துவமனையில் பயிற்சி பெற்றவர்களை கொண்டு தமிழகத்தில் 98,531 போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட போலீசார்

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட போலீசார்

இவர்களில் 4,484 போலீஸார் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் அளிக்கப்படுகிறது. இத்திட்டத்துக்காக ஒதுக்கிய ரூ.10 கோடியில் இதுவரை ரூ. 6.79 கோடி செலவாகியுள்ளது. தொடர் பயிற்சிக்காக தமிழக அரசு மேலும் ரூ.61.51 லட்சத்தை ஆகஸ்ட் 2ஆம் தேதி ஒதுக்கியது. கொரோனாவால் 2020 பிப்ரவரி முதல் 2021 அக்டோபர் வரை பயிற்சி முகாம்கள் நடைபெறவில்லை.

வழக்கு முடித்து வைப்பு

வழக்கு முடித்து வைப்பு

இதனால் நிமான்ஸ் உடனான ஒப்பந்தம் நடப்பாண்டு செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் அடுத்தாண்டு செப்டம்பர் வரை நீட்டிக்கப்படும் என்று தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான சூமோட்டோ வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 கொலை வழக்கு விசாரணை

கொலை வழக்கு விசாரணை

உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்துக்கொண்ட சூமோட்டோ வழக்கில் தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக இரட்டைக் கொலை வழக்காக சிபிஐ பதிவு செய்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
High court Madurai bench has ordered the closure of the suo moto case regarding Jayaraj and Fennix custodial death in sathankulam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X