மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கை குண்டுவெடிப்பு.. மீனாட்சி அம்மன் கோவிலில் பல அடுக்கு பாதுகாப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    மீனாட்சி அம்மன் கோவிலில் பல அடுக்கு பாதுகாப்பு

    மதுரை: இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பங்கள் எதிரொலியாக, மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பாதுகாப்பு பணிகளை மாநகர காவல்துறை ஆணையர் டேவிட்சன் ஆசீர்வாதம் நேரில் ஆய்வு செய்தார்.

    இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலியாக உலகபுகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மதுரை மாநகர காவல்ஆணையர் டேவிட்சன் தேவாசிர்வாதம் கோவில் பிரகாரம் மற்றும் 4பகுதிகளில் உள்ள நுழைவாயில்களிலும் நேரில் ஆய்வுமேற்கோண்டார்.

    Security beefed up to Madurai Meenakshi amman temple

    ஏற்கனவே மீனாட்சியம்மன் கோவில் பாதுகாப்பு பணியில் 150பேர் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக 157போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவிலுக்குள் வரும் அனைத்து பக்தர்களும் சோதனைக்கு உட்படுத்தபட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

    தேர்தல் ஆணையத்துக்கு ஹைகோர்ட் சுளீர் அடி.. மதுரை கலெக்டரை மாற்ற அதிரடி உத்தரவு தேர்தல் ஆணையத்துக்கு ஹைகோர்ட் சுளீர் அடி.. மதுரை கலெக்டரை மாற்ற அதிரடி உத்தரவு

    Security beefed up to Madurai Meenakshi amman temple

    கோவில் பிரகாரம் மற்றும் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் உள்ள நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுவருகிறது. மாசி வீதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகள் அனைத்தும் முழுமையாக கண்காணிப்பட்டுவருகிறது. ஏதேனும் சந்தேகப்படும்படியான நபர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகிறது.

    Security beefed up to Madurai Meenakshi amman temple

    இதனிடைய இலங்கை குண்டுவெடிப்பு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் மீனாட்சியம்மன் கோவில் கிழக்கு கோபுர பகுதியில் காவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் குடும்பத்தினர் உரிய சோதனைக்கு உட்படுத்தாமல் செல்போனுடன் அனுமதிப்பதாக பக்தர்கள் குற்றம்சாட்டினா்.

    Security beefed up to Madurai Meenakshi amman temple
    English summary
    Security has been beefed up to the famous Meenakshi Amman temple in Madurai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X