மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'ஐ எம் வெயிட்டிங்'.. ரஜினி அரசியலுக்கு வரட்டும்.. சீமான் பரபரப்பு பேச்சு

Google Oneindia Tamil News

மதுரை: ரஜினி முதலில் அரசியலுக்கு வரட்டும் என்றும் ஐ எம் வெயிட்டிங் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவ்வப்போது பேசும் சில உணர்ச்சி மிகுதி பேச்சுக்கள் சர்ச்சையாக உருவெடுத்துவருகிறது.

அந்த வகையில் அவர் அண்மையில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசும் போது நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டுபோட்டவர்கள் மட்டுமே தமிழர்கள் என்றும், ஓட்டுபோடதவர்கள் தமிங்கிலர்கள் என்றும் பேசினார். நடிகர்களை தூக்கி வைத்து திரியும் தமிங்கிலர்களை கட்டி வைத்து தோலை உரிப்பேன் என்றும் அவர் கடுமையாக பேசியிருந்தார்.

பிரசாந்த் கிஷோரை மீண்டும் அழைக்கும் ஜெகன் மோகன்... என்ன காரணம்? பிரசாந்த் கிஷோரை மீண்டும் அழைக்கும் ஜெகன் மோகன்... என்ன காரணம்?

கடுமையாக பேச்சு

கடுமையாக பேச்சு

இந்நிலையில் மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றும் போதும் உணர்ச்சி வேகத்தில் கடுமையாக பேசினார்.

இறந்துவிடுங்கள்

இறந்துவிடுங்கள்

அப்படி பேசிக்கொண்டிருந்த போது ஒரு கட்டத்தில் நாம் தமிழர்கள் மீது வழக்கு போடுபவர்கள், நாம் தமிழர் போஸ்டர்களை கிழிப்பவர்களுடைய பெயர்ப்பட்டியலை தான் தயார் செய்து வைத்திருப்பதாகவும் அவர்கள் எல்லோரும் தாம் ஆட்சிக்கு வருவதற்குள் இறந்துவிடுமாறு எச்சரித்தார்.அப்படி இல்லையென்றால் அவர்களை கொன்றுவிடுவேன் என்றும் சீமான் ஆவேசத்துடன் தெரிவித்தார். இவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

வாக்களிக்காதவர்கள்

வாக்களிக்காதவர்கள்

மேலும் வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தால் மட்டுமே மக்கள் வாழ முடியும் என்றும் இல்லை என்றால் செத்து போக வேண்டியதுதான் என்றும் சீமான் கோபமாக தெரிவித்தார்.

அம்பேத்கார் படம்

அம்பேத்கார் படம்

அடுத்து வரும் தேர்தலில் நாம் தமிழர் ஆட்சியை பிடித்தால் வீட்டுக்கு ஒரு கார் வழங்க போவதாகவும், வெற்றி பெற்ற பிறகு மக்களுக்கு வீடு தோறும் சென்று ஒருவர் புகைப்படத்தை தருவேன். அது வேறு யாருமல்ல அம்பேத்கார் தான் என்றும் தெரிவித்தார்.

பிரபாகரன் குறித்து

பிரபாகரன் குறித்து

தமிழகத்தில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை தீவிரவாதி என்றும் ரஜினிகாந்தை தலைவர் என்றும் சொல்லும் நிலை தமிழகத்தில் இருப்பதாக அவர் வேதனை தெரிவித்தார். ரஜினி முதலில் அரசியலுக்கு வரட்டும் என்றும் ஐ எம் வெயிட்டிங் என்றும் உரக்க குரல் எழுப்பினார்.

காங்கிரஸ் எப்படி

காங்கிரஸ் எப்படி

நாட்டை யார் முதலில் விற்பது என்பதில் காங்கிரஸ் பாஜக ஆகிய கட்சிகளியே போட்டி இருப்பது தான் இரு கட்சிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்றும் சீமான் விமர்சித்தார்.

English summary
seeman angry speech against who did not vote to Naam Tamilar party, he says they cannot not live here
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X