• search
மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

என்கிட்ட ஒரு நாள் வருவே.. அப்ப இழுத்து வச்சு அறைவேன்.. அவ்வளவு வெறுப்பா இருக்கு.. சீமான் வேதனை

|
  விளாச்சேரியில் சீமான் பேச்சு -வீடியோ

  திருப்பரங்குன்றம்: "உலக வர்த்தக அமைப்பு இலவச அரிசி, உணவு, எரிவாயு மானியத்தை நிறுத்து என்கிறார்கள். கார் இருக்கும் ஆனா தண்ணி இருக்காது. காரை எடுத்துக்கிட்டு தண்ணிக்கு அலைவே. நீ எழுதி வெச்சுக்கோ.. எங்க சுத்தினாலும் அண்ணே காப்பாத்துன்னு நீ என்கிட்டதான் வருவே" என்று சீமான் தெரிவித்துள்ளார்.

  திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரேவதியை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளாச்சேரியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

  இந்த நாட்டில் மிகபெரிய உயிரியில் போரை நடத்தி கொண்டிருக்கிறது வல்லரசு நாடுகள். சீனா போன்ற நாடுகள் இங்கு தங்கள் சந்தையை விரிவடைய செய்து ஆக்கிரமித்துள்ளது.

  கோட்சே ஒரு கொலைக்காரன்.. தீவிரவாதி இல்லை... சுப்பிரமணிய சுவாமி விளக்கம்!

  சீன தயாரிப்பு

  சீன தயாரிப்பு

  கதவு, ஜன்னல்வரை சீனாதான் தயாரிக்குது. நீ படுக்கிற பாய், குழந்தைக்கு முன்னாடி ஆட்டுற கிலுகிலுப்பை வரை சீனாதான் தயாரிக்குது? அதை ஏன் இவர்கள் செய்யறது இல்லை. அட அறிவுகெட்டவங்களே.. கக்கூஸ் கழுவுற விளக்கமாறுகூட சீனாவில் இருந்தா வரணும்?

  வீடு பெருக்குகிறோம்

  வீடு பெருக்குகிறோம்

  அதை நாங்க தென்னை மரத்துல இருந்து எங்க படிக்காத அப்பனும், ஆத்தாளும் தயாரிச்சு குடுத்துடுவாங்களே.. அட கருமம் புடிச்சவங்களே.. அதுலதானே நாங்க வீடு பெருக்குகிறோம்.. கக்கூஸ் கழுவுறோம். இதுதானே தற்சார்பு! தென்னை மரத்தில் இருந்து பந்தல் போட்டு பல்லாயிரக்கணக்கானோர் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். சாமியானா என்ற சனியன் வந்தது, பந்தல் போடறவன் செத்தான். அதோடு போச்சு எங்க தற்சார்பு. எல்லாமே அழியுது.

  டெய்லர் செத்துட்டான்

  டெய்லர் செத்துட்டான்

  நீ ஷாம்பு கொண்டு வந்தே. சீயக்காய் அரைச்சு வித்துட்டு இருந்தவன் செத்து போனான். நீ பீட்சா பக்கம் போனே, அங்க இட்லி, இடியாப்பத்தை தெருவுல வித்துட்டு இருந்த அப்பத்தா கிழவி செத்துபோனே.. பால் பாக்கெட் பக்கம் போனே, வீடு வீடுக்கும் பால் ஊத்திட்டு இருந்ததை ஒழிச்சிட்டே. நீ ரெடிமேட் வாங்க போனே.. டெய்லர் செத்துட்டான். இதுதான் கேடுகெட்டவங்க பண்றது.

  சாராயக்கடை

  சாராயக்கடை

  இப்படியே உங்களை உட்கார வச்சு கடைசியில கொண்டு வந்தது 100 நாள் வேலை திட்டம்? எத்தனை பானை, சட்டி செஞ்சே? தொழில் செய்வது அரசாங்க வேலை இல்லை, அதை தனியாரிடம் கொடுத்துவிட்டு, கமிஷன் வாங்குவது என்ற முடிவுக்கு அரசு வருகிறது. ஆனால் சாராயக்கடை நடத்துறது மட்டும் அரசின் வேலை. அதை மட்டும் கையில் வெச்சுக்குது.

  உலக வர்த்தகம்

  உலக வர்த்தகம்

  உலக வர்த்தக அமைப்பு இலவச அரிசி, உணவு, எரிவாயு மானியத்தை நிறுத்து என்கிறார்கள். கார் இருக்கும் ஆனா தண்ணி இருக்காது. காரை எடுத்துக்கிட்டு தண்ணிக்கு அலைவே. நீ எழுதி வெச்சுக்கோ.. எங்க சுத்தினாலும் அண்ணே காப்பாத்துன்னு நீ என்கிட்டதான் வருவே. அப்போ உன்னை ஒரு கேள்வி கேட்பேன், என்னன்னு தெரியுமா? யாருக்கு ஓட்டு போட்டேன்னு கேட்பேன். இரட்டை இலைன்னு சொல்லுவே, அப்போ இழுத்து வச்சு ஒரே அறை அறைவேன். இந்த பக்கம் யாருக்கு, அவங்களுக்கா.. இன்னொரு அறை.. அவ்வளவு வெறுப்பா இருக்கு. எவ்வளவுதான் கத்தறது?" என்றார்.

   
   
   
  English summary
  Seeman slams BJP and campainged for Thiruparankundram Candidate Revathi
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X