மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொருளாதாரத்தில் பாஜகவினர் கவனம் செலுத்தவில்லை.. சு.சுவாமி கூறியதும் சரிதான்.. சீமான்

Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜகவின் கொள்கை சரியில்ல... வைரலாகும் சுப்பிரமணியன் சாமியின் வீடியோ

    மதுரை: நாட்டின் பொருளாதாரத்தில் பாஜகவினர் கவனம் செலுத்தவில்லை என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

    மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் பாஜகவினர் நாட்டின் பொருளாதாரத்தில் கவனம் செலுத்தவில்லை.

    இந்தியா மீது நாங்களாக போர் தொடுக்க மாட்டோமா?.. யார் சொன்னது?.. அணு கொள்கையில் மாற்றம் இல்லை.. பாக்.இந்தியா மீது நாங்களாக போர் தொடுக்க மாட்டோமா?.. யார் சொன்னது?.. அணு கொள்கையில் மாற்றம் இல்லை.. பாக்.

    வரி குறைப்பு

    வரி குறைப்பு

    சரக்கு மற்றும் சேவை வரி மிகப் பெரிய பின்னடைவுக்கு கொண்டு செல்லும் என நாங்கள் அறிவுறுத்திக் கொண்டுதான் வருகிறோம். ஆனால் யாரும் அதை கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை. இப்போதுதான் அந்த வரியை குறைக்கிறோம் என்கிறார்கள்.

    தெரியவில்லை

    தெரியவில்லை

    பாதிப்பு ஏற்பட்டதால்தான் அதை குறைக்க வேண்டும் என்கிற எண்ணமே வருகிறது. பொருளாதார வீழ்ச்சியை நினைக்கும் போது பதற்றமாகவும் பயமாகவும் இருக்கிறது. அதை எப்படி செய்ய போகிறோம் என தெரியவில்லை என சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளது சரி.

    சுப்பிரமணியன் சுவாமி

    சுப்பிரமணியன் சுவாமி

    தமிழிசை நீண்ட காலமாக அரசியலில் அனுபவம் வாய்ந்தவராக இருக்கிறார். அவர் மூத்த தலைவரும் கூட. அவருக்கு மதிப்பு கொடுக்க ஆளுநர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. வங்கிகள் இணைப்பு விஷயத்தில் அவசரப்பட்டு விட்டார்கள் என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியது சரி.

    தோல்வி

    தோல்வி

    ரயில்வே துறை தனியார்மயமாகிறது என்கிறார்கள். உள்ளாட்சி தேர்தலை நடத்துங்கள் என நீதிமன்றங்களே கூறிவிட்டது. ஆனால் இதை அரசு கண்டுகொள்ளாமல் காலம் தாழ்த்தி வருகிறது. உள்ளாட்சி தேர்தலை நடத்த மாட்டார்கள். வெற்றி மீது நம்பிக்கை இல்லாததால் தோல்வி நிகழ்ந்து விடுமோ என்ற பயம் உள்ளது என்றார் சீமான்.

    English summary
    Naam Tamilar Movement Organiser Seeman says that BJP is not concentrating on India's Economy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X