மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எங்களை ஏற்காவிட்டாலும் தொடர்ந்து களத்தில் இருப்போம்.. பின்னடைவிலும் துவளாமல் பேசும் சீமான்!

Google Oneindia Tamil News

மதுரை: எங்களை ஏற்பதும், ஏற்காமல் விடுவதும் மக்களின் பிரச்சினையாகும். ஆயினும் தொடர்ந்து களத்தில் நிற்போம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் துவளாமல் பதில் அளித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி தமிழகத்தில் வேலூர் நீங்கலாக 38 எம்பி தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதற்கான தேர்தல் முடிவுகள் மே மாதம் வெளியானது. இதில் 38 தொகுதிகளில் 5-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3-ஆவது இடத்தை பிடித்தது.

38 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 15 லட்சம் வாக்குகளை பெற்றது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், எத்தனை தோல்வி வந்தாலும் துவளமாட்டோம். வேறு கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என கூறியிருந்தார்.

சர வெடி.. இனிப்பு.. ரிசல்ட் வரும்முன்பே அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம் சர வெடி.. இனிப்பு.. ரிசல்ட் வரும்முன்பே அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

தீபலட்சுமி

தீபலட்சுமி

அதுபோல் உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்பீர்களா என்ற கேள்விக்கும் அவர் நிச்சயமாக என பதிலளித்திருந்தார். இந்த நிலையில் வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் தீபலட்சுமி என்பவரை வேட்பாளராக அறிவித்தார்.

திமுக அதிமுக

திமுக அதிமுக

இதற்கான தேர்தல் கடந்த 5-ஆம் தேதி நடந்து முடிந்து இன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையில் அதிமுகவும் திமுகவும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகிறது.

வாக்கு வித்தியாசம்

வாக்கு வித்தியாசம்

இதில் மூன்றாம் இடத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது. இதன் வாக்கு சதவீதமும் 2.6 ஆக உள்ளது. இந்த வாக்குகள் நிச்சயம் திமுக, அதிமுகவின் வாக்கு வித்தியாசத்தை நிர்ணயிக்கும் நிலையில் உள்ளது.

களத்தில் நிற்போம்

களத்தில் நிற்போம்

இதுகுறித்து மதுரையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில் நாம் தமிழர் கட்சியை மக்கள் ஏற்பதும் ஏற்காமல் விடுவதும் அவர்களது பிரச்சினை. எனினும் நாங்கள் தொடர்ந்து களத்தில் இருப்போம்.

மன்னிக்க வேண்டும்

மன்னிக்க வேண்டும்

அதிமுக பணம் கொடுத்தவர்கள் ஆளும் கட்சி. குறைவாக பணம் கொடுத்தவர்கள் எதிர்க்கட்சி என்ற நிலைதான் உள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் எதிர்த்தவர்களை மோடி ஏன் மன்னிக்க வேண்டும் என தெரியவில்லை? பணப்பட்டுவாடா இல்லாமல் போட்டியிட்டால் மக்கள் எங்களுக்கு வாக்களிக்கும் சூழல் உருவாகும் என்றார் சீமான்.

English summary
Naam Tamilar movement Organiser Seeman says that we will be in the battle field continuously.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X