மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாதீய வாக்கை குறி வெச்சு பாயுற.. இந்த திராவிட கட்சிகளாலதான் பிரச்சனையே.. சீமான் காட்டம்

திராவிட அரசியலை கடுமையாக விமர்சித்துள்ளார் சீமான்

Google Oneindia Tamil News

Recommended Video

    திராவிட அரசியல்தான் காரணம்.. திமுக, அதிமுக மீது சீமான் பாய்ச்சல்-வீடியோ

    மதுரை: "என்னைக்காவது கருணாநிதியும், ஜெயலலிதா அம்மையாரும், இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு போய் நீங்கள் பார்த்திருக்கீங்களா? அவங்க போக மாட்டாங்க... சாதியை வாக்கை குறி வெச்சு பாயுற இந்த திராவிட கட்சிகளாலதான் பிரச்சனையே" என்று சீமான் நறுக்கென தெரிவித்துள்ளார்.

    தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சீமான் மதுரையில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, முதல்வரின் வெளிநாட்டு பயணம் முதல் சாதி அரசியல்வரை தனது கருத்துக்களை தெரிவித்தார்.

    சீமான் பேசும்போது, "ஆளுங்கட்சியை தாக்கி பேசுவதுதானே எதிர்க்கட்சியின் வேலை. திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் அனைத்திற்கும் வெள்ளையறிக்கை கொடுத்திருக்கிறார்களா?? அப்படி ஒன்றும் கொடுக்கவில்லை.

    கருணாநிதி

    கருணாநிதி

    அம்மையார் ஜெயலலிதா இருக்கும் பொழுது பல முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. எடப்பாடி இருக்கும்போதும் நடத்தப்பட்டது அந்த மாநாட்டிற்கு என்ன முடிவு என்றே தெரியவில்லை. இப்போ இவங்க போய் பார்த்துட்டு வந்திருக்காங்க. ஆனா அங்கிருந்து வருவாங்களான்னு தெரியாது.

    வெளிநாட்டு பயணம்

    வெளிநாட்டு பயணம்

    அவங்களா வந்தாங்க, ஒரு மாநாடு நடத்தினீங்க சரி, இப்போ நீங்களா போய் கூப்பிட்டு வந்திருக்கீங்க. ஒவ்வொரு துறை சார்ந்த அமைச்சர்களிடமும் பல்லாயிரக்கணக்கான கோடிகள் பதுக்கியும், ஒதுக்கியும் வெச்சிருக்காங்க. ஆனா, இப்போ 4 ஆயிரம், 5 ஆயிரம் கோடி முதலீட்டுக்கு போய் வர்றாங்க. இது ஒரு வேடிக்கைதான். எந்த முதலாளி வந்து இங்கு முதலீடு செய்ய போறார்னு பார்த்துட்டுதான் இந்த வெளிநாட்டு பயணம் பத்தி நாம பேசணும்.

    144 எதுக்கு?

    144 எதுக்கு?

    எம்ஜிஆர், பெரியார் சிலை இங்க எங்கேயாவது இடிக்கப்படுகிறதா? ஆனால் மண்ணின் மகத்துவம் தலைவர்களாக இருக்கக்கூடிய காமராஜர், முத்துராமலிங்கத் தேவர், இம்மனுவெல் சேகர் சிலைகள் இன்னமும் கூண்டுக்குள் தானே இருக்கிறது. இறந்து போன எங்களது முன்னோர்களுக்கு வணக்கம் செலுத்தும்போது, எதுக்கு 144 தடை உத்தரவு அப்பேர்ப்பட்ட சூழ்நிலைகளை அரசு தான் உருவாக்கியது.

    திராவிட கட்சிகள்

    திராவிட கட்சிகள்

    முத்துராமலிங்கருக்கு வணக்கம் செலுத்த போறாங்க. அதோடு நம்ம வாக்கு வங்கி சரியாயிடுச்சுன்னு நினைச்சுக்கிறாங்க. அதே கூட்டம் எங்க அப்பத்தா வேலுநாச்சியாருக்கு மரியாதை செலுத்துவதில்லை? எங்க பாட்டன் மருதுபாண்டியனுக்கு செலுத்துறது இல்லை? ஏன்னா இங்கேயே ஓட்டு கவர் ஆயிடுச்சு. சாதியை வாக்கை குறி வெச்சு பாயுற இந்த இந்த திராவிட கட்சிகளாலதான் பிரச்சனையே. இன முன்னோர்களுக்கு மரியாதை செய்யணும் இல்லை?

    ஓட்டு கிடைக்காது

    ஓட்டு கிடைக்காது

    முத்துராமலிங்க தேவர் நினைவிடத்துக்கு வர்றவங்க, பூலித்தேவன் நினைவிடத்துக்கு போறது இல்லை. ஏன்னா, தேவர் ஓட்டு கவர் ஆயிடுச்சு. இம்மானுவேல் சேகர் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த போனால், தேவர்கள் எல்லாம் ஓட்டு போட மாட்டாங்க. கோச்சுப்பாங்க. தேவர் சாதியினர் ஓட்டு கிடைக்காதுன்னு நினைக்கிறாங்க. அதனால அங்க போறது இல்லை.

    ஜெயலலிதா

    ஜெயலலிதா

    ஆனா நாங்க அப்படி பார்க்கறது இல்ல. எங்கள் இன மேம்பாட்டுக்கு உயிர் தியாகம் செய்தவர்கள் என்று நாங்கள் பார்க்கிறோம். என்னைக்காவது கருணாநிதியும், ஜெயலலிதா அம்மையாரும், இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு போய் நீங்கள் பார்த்திருக்கீங்களா? போக மாட்டாங்க" என்றார் சீமான்.

    ஆனால், முதல்முறையாக பரமக்குடியில் உள்ள இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்திற்கு இன்று திமுக தலைவர் முக ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Naam Tamizhar Party Seeman slams Diravida Politics and DMK, ADMK Parties in Madurai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X