மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓட்டு போட காசே தரலைன்னு யாராவது ஒருத்தர சொல்ல சொல்லுங்க.. சீமான் அதிரடி அட்டாக்

தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை என சீமான் கருத்து கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

மதுரை: ஓட்டு போட்டு முடிஞ்சதும், 42 நாட்கள் பெட்டியை ஒரே இடத்தில் வைச்சிருந்தீங்க. இதில் எப்படி முறையான வெற்றி இருக்க முடியும்? என்று சீமான் தேனி தொகுதி வெற்றி குறித்து விமர்சித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது நடந்து முடிந்த தேர்தலில் ஓபிஎஸ் மகன் வெற்றி, மற்றும் தேர்தல் முறை குறித்து காரசாரமாக விமர்சித்தார். சீமான் சொன்னதாவது:

"எங்களை பொறுத்தவரை இந்த தேர்தலில் எங்களுக்கு வெற்றிதான் கிடைத்துள்ளது. அடுத்தவங்க கட்சியை நாங்க எடுத்து வரவில்லை. நடிச்சு அதன்மூலம் ரசிகர்களையும் கொண்டு வரவில்லை. சாதாரண குடிமக்களாக பிறந்து உண்மையான அரசியலை கொண்டுவந்து, புரட்சிகரமான அரசியலை செய்து வருகிறோம்.

மாணவர்கள் மகிழ்ச்சி... அரியர் விதிமுறைகளை தளர்த்தியது அண்ணா பல்கலைக் கழகம் மாணவர்கள் மகிழ்ச்சி... அரியர் விதிமுறைகளை தளர்த்தியது அண்ணா பல்கலைக் கழகம்

மறுதேர்தல்

மறுதேர்தல்

வாக்கு இயந்திரங்கள் கொண்டு வருவது நாடெங்கும் நடந்துள்ளது. அதேபோல் தேனியில் நடந்திருக்க வாய்ப்பு அதிகம் தேனியில் வாக்கு இயந்திரம் கொண்டு வந்து இருக்கிறார்கள் என்று எங்களுக்கு கூறினார்கள். திடீரென்று மறு தேர்தல் வந்தால் என்ன செய்வது மறு தேர்தல் வரப் போகிறதா என்று நாங்கள் கேட்டோம். ஆனால் அதற்கு எந்த ஒரு பதிலும் கூறவில்லை.

20 லட்சம் பெட்டி

20 லட்சம் பெட்டி

வாக்குப் பெட்டி என்பது ஜப்பான் நிறுவனம் மைக்ரோசிப் மூலம் தயாரித்துக் கொடுப்பது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ஒருவர் எத்தனை வாக்குப்பெட்டிகள் ஜப்பானிடம் இருந்து வாங்கப்பட்டது என்று கேட்கிறார். 20 லட்சம் பெட்டிகள் அனுப்பப்பட்டது என ஜப்பான் கூறுகிறது. அந்த 20 லட்சம் பெட்டிகள் வந்து சேர்ந்து இருக்கிறதா என தேர்தல் ஆணையத்திடம் கேட்டால் இல்லை என தேர்தல் ஆணையம் கூறுகிறது.

வாக்கு பெட்டிகள்

வாக்கு பெட்டிகள்

வாக்கு முடிந்து 42 நாட்கள் பெட்டியை ஒரே இடத்தில் வைத்து உள்ளீர்கள். நீங்களே வாட்ஸ்அப், யூ-டியூப் தட்டி பாருங்கள். கடைகளில் இருந்து 150 வாக்கு பெட்டிகளை எடுத்துட்டு வர்றாங்க. ஆட்டோவில் வாக்கு பெட்டியைக் கொண்டு வருகிறார்கள். சிறுவன் வாக்குபெட்டியை தூக்கிக் கொண்டு செல்கிறான். முறையா தேர்தலை நடத்தினால்தான் இதை வெற்றின்னு சொல்ல முடியும்? ஒரு சில ஊர்களில் அதிகாரியே அனைவரின் ஓட்டுகளை செலுத்தி வருகிறார்.

கையேந்த வைத்துவிட்டனர்

கையேந்த வைத்துவிட்டனர்

ஓட்டு போட காசே தரலைன்னு யாராவது ஒருத்தர சொல்ல சொல்லுங்க. நாங்கள் கூட்டம் கூட்டும் போது மக்களுக்கு காசு கொடுக்காமல் கூட்டினோம் என்று கூற சொல்ல முடியுமா? ஆடு மாடுகளை ஓட்டி செல்வது போல் கூட்டங்களை ஏற்றி சென்று நிறுத்தி மக்களை 200, 300 ரூபாய்க்கு கையேந்த வைத்து எப்படி ஒரு தேர்தல் நடத்தினால் நாடு எதை நோக்கி செல்கிறது.

English summary
Naam Tamilar Party Seeman is accused of not being conducted electorally and honestly
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X