மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடனை கட்டாவிட்டால் வீட்டை விட்டு போகமாட்டோம்.. அசிங்கமாக பேசிய பைனான்ஸ் ஊழியர்கள்! பெண்கள் கொதிப்பு

Google Oneindia Tamil News

மதுரை: மகளிர் சுய உதவிக்கடன்களை வசூல் செய்வதாக பெண்களை மிரட்டும் நிதிநிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண்கள் அமைப்பினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.

Recommended Video

    கடனை திரும்ப கேட்டு அசிங்கமாக பேசிய பைனான்ஸ் ஊழியர்.. கொதித்த பெண்கள் - வீடியோ

    அப்போது வீட்டில் அமர்ந்து நிதிநிறுவன ஊழியர் ஒருவர் பெண்களை மிரட்டும் வீடியோவை அதிகாரிகளிடம் அளித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    Self Help Groups: Demanding action against microfinance into collecting womens self-help group loans

    கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில் மகளிர் சுய உதவிக்குழு மற்றும் மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டுவதோடு மிரட்டல் மூலமாக நிலுவைதொகை பணத்தை வசூல் செய்யும் நிதிநிறுவனத்தினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும், மகளிர்குழு கடன்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய விவசாய கிராமபுற தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஏராளமான பெண்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தின் போது அரசுக்கு எதிராகவும், நிதிநிறுவனங்களுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    Self Help Groups: Demanding action against microfinance into collecting womens self-help group loans

    இதனையடுத்து நிதிநிறுவன ஊழியர்கள் சிலர் வீடுகளில் வாசலில் அமரந்துகொண்டு பணம் செலுத்தினால் மட்டுமே வீட்டைவிட்டு நகர்வோம் என கூறி பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டும் வீடியோ காட்சி ஒன்றை அதிகாரிகளிடம் வழங்கினர். இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

    லடாக்கில்... 38,000 சதுர கி. மீட்டர் சீனா ஆக்கிரமிப்பு... பகிரங்கமாக ஒப்புக் கொண்ட ராஜ்நாத் சிங்!!லடாக்கில்... 38,000 சதுர கி. மீட்டர் சீனா ஆக்கிரமிப்பு... பகிரங்கமாக ஒப்புக் கொண்ட ராஜ்நாத் சிங்!!

    இதனையடுத்து காவல்துறையினர் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கலைந்து சென்றனர். பெண்களின் முற்றுகை போராட்டத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    English summary
    Women's organizations staged a protest at the Madurai District Collector's Office demanding action against financial institutions that intimidate women into collecting women's self-help loans.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X