மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

10 மணிக்கு மேல் செல்போனே பேச மாட்டேன்.. சசிகலா ஆதரவு ஆடியோ குறித்து செல்லூர் ராஜு விளக்கம்

Google Oneindia Tamil News

மதுரை: சசிகலாவுக்கு ஆதரவாகவும், அதிமுக தலைவர்கள் தான் விமர்சித்து பேசியதாக பரவி வரும் ஆடியோ போலியானது என்றும், அது தன்னுடைய குரல் அல்ல என முன்னாள் அமைச்சரும் அதிமுக எம்.எல்.ஏ.வுமான செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

Recommended Video

    10 மணிக்கு மேல் செல்போனே பேச மாட்டேன்.. சசிகலா ஆதரவு ஆடியோ குறித்து செல்லூர் ராஜு விளக்கம்

    அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவாக பேசியவர்கள், சசிகலாவை சந்திப்பவர்கள் அதிமுகவில் இருந்து கழகத்தின் கண்ணியத்திற்கும் கட்டுக்கோப்புக்குள் குந்தகம் விளைவித்ததாக நீக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் சசிகலாவுக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்து பேசியதாக மிக மூத்த அதிமுக உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அன்வர்ராஜா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் இந்த பரபரப்பு அடங்குவதற்குள் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அதிமுக தவறுகளை விமர்சித்தும் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து கூட்டம் நடத்துவதாக பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆனது..

    sellur Raju has said that he did not speak in support of Sasikala in the spread audio

    சசிகலாவின் ஆதரவாளரான சக்திவேல் ராஜன் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் தற்போது குவைத்தில் பணியாற்றி வரும் நிலையில் குவைத் ராஜன் எனவும், குவைத் சக்திவேல் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறார். தற்போது இவர் சசிகலாவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தென் மண்டல நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசி ஆடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

    இந்த நிலையில் முன்னாள் அமைச்சரும் மதுரை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான செல்லூர் ராஜு உடன் தான் பேசியதாக வைத்த ராஜன் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில் எதிர்த்தரப்பில் பேசுவது செல்லூர் ராஜூ எனவும் அதிமுக தலைவர்கள் விமர்சித்தும் தான் சசிகலா ஆதரவு நிலைப்பாட்டில் தான் இருப்பதாகவும் இது தொடர்பாக மதுரையில் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்த இருப்பதாகவும் கூறியிருந்தார்...

    அன்வர்ராஜா நீக்கப்பட்ட சலசலப்பு அடங்குவதற்குள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாக பரவிய ஆடியோ அதிமுகவிற்கு கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது மேலும் அவர் சசிகலா ஆதரவு நிலைப்பாட்டில் தான் உள்ளார் எனவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோவில் உள்ள குரல் தன்னுடையது இல்லை எனவும், தனக்கும் அந்த ஆடியோவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்..

    இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் கட்சியை நல்ல முறையில் நடத்தி வருகின்றனர் , அனைத்து நிர்வாகிகளும் ஒற்றுமையாக செயல்பட்டு வரும் இந்த நிலையில் அதிமுகவின் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் சில விஷமிகள் சதி வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக வலைத்தளங்கள் தான் பேசுவது போன்று ஆடியோ பதிவு வெளியாகி உள்ளது உண்மை இல்லை எனவும், தான் 10 மணிக்கு மேல் செல்போனை பயன்படுத்துவது கிடையாது எனக் கூறியுள்ளார் . ஆனால் நள்ளிரவு 1 மணிக்கு தான் பேசுவது போல மிமிக்ரி செய்து விஷமிகள் தேவையற்ற கருத்துக்களை பரப்பி வருவதாகவும் தன் மீது களங்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்து குழப்பம் விளைவிக்க பார்ப்பதாகவும் செல்லூர் ராஜூ கூறினார்..

    அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்து கட்சியின் தலைமை தான் முடிவு செய்யும், இப்போது உள்ள ஒருங்கிணைப்பாளர்கள் கட்சியை வழிநடத்தி வருகிறார்கள், எனவே தற்போதைய நிலையில் கட்சித் தலைமைக்கு புதிதாக ஒருவரை கொண்டுவரத் தேவையில்லை எனவும், என் குரலில் மிமிக்ரி செய்து அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் மீது கட்சித் தலைமையிடம் அனுமதி பெற்று சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்

    English summary
    Former minister and AIADMK MLA sellur Raju has said that the audio in support of Sasikala and the criticism leveled by AIADMK leaders was fake and not his voice.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X