மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ப.சி."யின் கதிதான் நேரும்.. ஸ்டாலினை மிரட்டிய மத்திய அரசு.. அமைச்சர் பரபரப்பு விளக்கம்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்டாலினை மிரட்டிய மத்திய அரசு.. அமைச்சர் பரபரப்பு விளக்கம்

    மதுரை: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு நேர்ந்த கதிதான் ஸ்டாலினுக்கும் நடக்கும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவரது காவல் வரும் அக்டோபர் 3-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

    இந்த நிலையில் மதுரை ஓபுளா படித்துறையில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார்.

    ஒரு வாரம் தான் கெடு; வீட்டை காலி செய்யுங்கள்-சந்திரபாபு நாயுடுவுக்கு ஷாக் கொடுத்த ஜெகன்ஒரு வாரம் தான் கெடு; வீட்டை காலி செய்யுங்கள்-சந்திரபாபு நாயுடுவுக்கு ஷாக் கொடுத்த ஜெகன்

    நடத்தவில்லை

    நடத்தவில்லை

    அப்போது செல்லூர் ராஜூ பேசுகையில் அதிமுக மட்டும் தொடங்கப்படாமல் இருந்திருந்தால் திமுகவினர் அண்ணாவின் புகழையே மறைத்திருப்பார்கள். அதிமுகவை போல் அண்ணா பிறந்த நாள் விழாவை ஒவ்வொரு ஊரிலும் அவர்கள் நடத்துவதில்லை.

    அமித்ஷா

    அமித்ஷா

    சாமானியரான நானும் , என்னை போன்றோரும் எம்எல்ஏவாகவும் எம்பியாகவும் இருக்க காரணம் அண்ணாதான். இந்தி மொழி தினத்தில் இந்தி மொழியை பேச வேண்டும் என்றுதான் அமித்ஷா சொன்னார். ஆனால் இது போல் ஏற்கெனவே ப.சிதம்பரம் பேசியுள்ளதை மறந்து அமித்ஷாவுக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

    ஸ்டாலின்

    ஸ்டாலின்

    அமித்ஷாவுக்கு எதிராக ஸ்டாலின் போராட்டம் அறிவித்தார். பின்னர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை பார்த்துவிட்டு அந்த முடிவை ஸ்டாலின் வாபஸ் பெற்றுவிட்டார்.

    அரசு மிரட்டல்

    அரசு மிரட்டல்

    ஆனால் உண்மை என்னவெனில் அவரது வண்டவாளங்கள் தூசி தட்டப்பட்டு மத்திய அரசு மிரட்டியதால் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளார். போராட்டம் நடத்தினால் ப. சிதம்பரத்துக்கு நடந்ததுதான் ஸ்டாலினுக்கும் நடக்கும் என மிரட்டப்பட்டிருக்கிறார் என்றார் செல்லூர் ராஜூ.

    English summary
    Minister Sellur Raju says that if Stalin indulge protest agaist Centre, he will meet the same fate of P.Chidambaram.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X