மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உள்ளாட்சித் தேர்தல்.. ஸ்டாலின் பேசிட்டே இருந்தார்.. இப்ப மூச்சு பேச்சை காணோம்.. செல்லூர் ராஜு

Google Oneindia Tamil News

Recommended Video

    Minister Sellur Raju has slammed DMK for unnecessary sledge against AIADMK

    மதுரை: உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டே இருந்தார். தற்போது பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கிறார் என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

    மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான 2019 மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு பெறும் நிகழ்வு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்டார்.

    sellur raju slams dmk for unnecessary sledge against aiadmk

    தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், மதுரையில் உள்ள கட்சித் நிர்வாகிகளும் விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டு வருகிறது. ஸ்டாலின் அதிமுகவை பறாண்டுவது போல் இருக்கிறார். என்னென்னமோ திட்டம் போட்டு பார்த்தார். எந்த எண்ணமும் பலிக்கவில்லை.

    கோபத்தின் உச்சத்தில் போய்விட்டார். உள்ளாட்சித் துறையின் நிர்வாக ரீதியாக தான் செயலாளர் மாற்றம் செய்யபட்டுள்ளது. வேறு எந்த காரணம் இல்லை.

    தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுக வெற்றிடத்தை நிரப்பி விட்டது. மு க அழகிரி சொல்வது அவர்கள் சொந்த கருத்தாக இருக்கலாம். திமுக ஆட்சிக்கு வருவதை மக்கள் விரும்பாதல் தான் ஆயிரக்கணக்கான வாக்குகள் அளித்து அதிமுகவை வெற்றி பெற வைத்துள்ளனர்.

    திமுகதான் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று போட்டி போட்டு கொண்டு பேட்டி கொடுத்தார்கள். ஆனால் தற்போது பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கிறார்கள்.

    தமிழகத்தின் ஐந்து புதிய மாவட்டங்களின் முதல் எஸ்.பி.க்கள் இவர்கள் தான்.. தமிழக அரசு நியமனம்தமிழகத்தின் ஐந்து புதிய மாவட்டங்களின் முதல் எஸ்.பி.க்கள் இவர்கள் தான்.. தமிழக அரசு நியமனம்

    ஐஐடி மாணவி தற்கொலை குறித்த கேள்விக்கு,மாணவர்கள் ஒழுக்கத்தோடு தன் குடும்பத்தை பின்புலத்தை பார்த்து எதிர்காலம் கருதியும் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மிகச்சிறந்த பாதுகாப்பு கட்டமைப்பு தமிழகத்தில் தான் உள்ளது. முதல்வர் அது குறித்து உரிய முடிவெடுப்பார்.

    தென்பெண்ணை ஆற்றின் தீர்ப்பு விவரம் முழுவதுமாக வெளிவந்த பின்பு முதல்வர் அது குறித்து பேசுவார். அதிமுக ஆட்சியில் தான் நதிநீர்ப்பிரச்சனை வேகமாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரிவித்தார் ராஜு.

    English summary
    Minister Sellur Raju has slammed DMK for unnecessary sledge against AIADMK regarding Local body elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X