மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தோப்பூரில் எய்ம்ஸ் அமைக்கும் பணிகள் தீவிரம்.. கடன் வழங்க ஆய்வு செய்த ஜப்பான் நிதிக்குழு

Google Oneindia Tamil News

Recommended Video

    தோப்பூரில் எய்ம்ஸ் அமைக்கும் பணிகள் தீவிரம்..வீடியோ

    மதுரை: மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை ஜப்பானிய நிதிக்குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்

    தோப்பூரில் 263 ஏக்கர் பரப்பளவில் 1,264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இதற்காக கடந்த ஜனவரி மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.

    Set intensity of the work for Aiims hospital.. Japan Finance Commission reviewed loan issuance

    முன்னதாக கடந்த 2015-ல் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 5 இடங்கள் பரிசீலிக்கப்பட்டன. மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்த போது மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம் செங்கிபட்டு, பெருந்துறை, மதுரை அருகே தோப்பூர் ஆகிய 5 இடங்களில் அரசு நிலம் கையகப்படுத்தப்பட்டு தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.

    இப்படியே நீடித்தால்.. இலங்கையில் இன்னொரு பிரபாகரன் உருவாகலாம்.. அதிபர் சிறிசேனா எச்சரிக்கை இப்படியே நீடித்தால்.. இலங்கையில் இன்னொரு பிரபாகரன் உருவாகலாம்.. அதிபர் சிறிசேனா எச்சரிக்கை

    மேற்கண்ட ஊர்களில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தை மத்திய அரசு தேர்வு செய்து, எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கலாம் என தகவல் தெரிவித்திருந்தார். இறுதியாக கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மதுரை தோப்பூர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 263 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவையும், கடந்த டிசம்பரில் ஒப்புதல் வழங்கியது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1,264 கோடி வழங்க ஒப்புதலாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது

    இதனையடுத்து கடந்த ஜனவரி 27-ம் தேதி மதுரை வந்து பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

    இன்று காலை மதுரை தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் சஞ்சய் ராய் தலைமையில் மத்திய குழுவினர், ஜப்பானிய நிதி குழுவினர், தமிழக அரசின் மருத்துவக் கல்வி இயக்கக துணை இயக்குனர் சபிதா மற்றும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் வனிதா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வில் மருத்துவமனை அமைய அமைவதற்கு ஏதுவாக நெடுஞ்சாலை வசதிகள், மின்சாரம் வசதிகள், தண்ணீர் வசதிகள் என அனைத்தும் சரியாக உள்ளதா, அதேபோல் மருத்துவமனை அமைப்பதற்கான இடம் பரப்பளவு சீராக உள்ளதா என்பது குறித்து ஜப்பானிய குழுவினர் ஆய்வு செய்தனர்.

    ஆய்வை தொடர்ந்து முறையான நிதியை கடன் தொகையாக வழங்குவதற்கு, ஜப்பானிய மற்றும் மத்திய குழுவினர் எழுத்துப்பூர்வமான அறிக்கையை வெளியிடுவார்கள் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    English summary
    The Japanese Finance Commission examined the location of the AIIMS hospital in Toppur, Madurai district
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X