• search
மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

2 நாள் ரூம் போட்டு.. ஒவ்வொரு ஊரிலும்.. பலமுறை நாசம் பண்ணிட்டான்.. 14 வயசு சிறுமியின் கதறல்!

|

மதுரை: "ரெண்டே நாளில் பலமுறை என்னை நாசம் செய்துட்டான்.. ஒவ்வொரு ஊரிலும் லாட்ஜில் ரூம் போட்டு என்னை கூட்டிட்டு போனான்" என்று 14 வயசு பெண் ஒருவர் போலீசில் கதறியுள்ளார்.. அந்த கண்ணீர் செய்திதான் இது:

மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த சிறுமி அவர்.. 14 வயசுதான் ஆகிறது.. சில நாட்களுக்கு முன்பு திடீரென காணாமல் போய்விட்டார்.. அதனால், வீட்டில் பதறிய பெற்றோர் அவரை எங்கெங்கோ தேடி அலைந்தனர்.. கடைசியில் போலீசில் புகார் தந்தனர்.

போலீசாருக்கு சிறுமியின் செல்போன் சிக்னல் மட்டும் சிக்கியது.. இது ஒன்றுதான் அவர்களுக்கு இருந்த ஒரே க்ளூ.. இதை வைத்து கொண்டு மற்றதை எல்லாம் கண்டுபிடிக்க முயன்றனர்.. ஆனால் அந்த சிக்னலோ பொள்ளாச்சி, திண்டுக்கல், பழனி என்று ஒவ்வொரு ஊராக மாறி கொண்டே இருந்தது.

விபத்தில் காலை இழந்தவர்... 165 கி.மீ. ஒற்றைக் காலில் சைக்கிள் பயணம்... தஞ்சை டூ மதுரை 10 மணி நேரம்விபத்தில் காலை இழந்தவர்... 165 கி.மீ. ஒற்றைக் காலில் சைக்கிள் பயணம்... தஞ்சை டூ மதுரை 10 மணி நேரம்

சிறுமி

சிறுமி

கடைசியில் செல்போன் ஆப் ஆகிவிட்டது, இதனால் இருந்த சிக்னலும் இல்லாமல் போய்விட்டது. பிறகு 2 நாள் கழித்து திரும்பவும் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் சிக்னல் காட்டப்பட்டது... இதையடுத்து விரைந்து சென்றனர் போலீசார்.. வலைவீசி தேடியதில், சிறுமியை கண்டுபிடித்துவிட்டனர்.. ஒரு இளைஞருடன் ஊரை விட்டு வந்துள்ளார்.. அந்த இளைஞர் பெயர் முகமது சபீன்.. 2 பேரும் ரூம் போட்டு தங்கியிருந்தபோது, கையும் களவுமாக சிக்கி கொண்டனர.

நட்பு காதல்

நட்பு காதல்

2 பேரும் ஃபேஸ்புக் நண்பர்களாம்.. அப்படியே மெசேஜ்ஞ்சர் மூலம் பழகியிருக்கிறார்கள்.. அந்த மெசேஞ்சரில் சிறுமியை ஆஹா, ஓஹோவென்று இந் முகமது வழிய, அதற்கு இந்த பெண்ணும் மயங்கியிருக்கிறார்.. கடைசியில் இந்த நட்பு காதலாகி, வீட்டை விட்டு வெளியேறி லாட்ஜில் ரூம் போடும் நிலைமைக்கு வந்துள்ளது.

முகமது

முகமது

இந்த முகமது இருக்கிறாரே... இவருக்கு தொற்று பரவிடும் என்ற பயம் இல்லை.. லாக்டவுன் கணக்கில்லை.. இ-பாஸ் கணக்கில்லை..ஒரே குறிக்கோள் பெண்ணிடம் ஜாலியாக இருப்பதுதான். "எப்படியாவது உன் முகத்தை மட்டும் பார்த்துட்டு நைட்டுக்குள்ள வீட்டுக்கு அனுப்பிவிடுகிறேன்" கட்டாயப்படுத்தி தான் சிறுமியை வெளியே வரவழைத்துள்ளார்.

பைக்

பைக்

அதனால் முகமது திண்டுக்கல்லில் இருந்து பைக்கில் மதுரைக்கு சென்றுள்ளார்.. இ-பாஸ் இல்லாமலேயே போயிருக்கிறார்.. பைக்கில் அந்த பெண்ணை வைத்து கொண்டு, இத்தனை ஊர்களுக்கும் இ-பாஸ் இல்லாமலேயே சென்றுள்ளார்.. ஒவ்வொரு ஊரிலும் லாட்ஜில் ரூம் போட்டு அந்த பெண்ணை நாசம் செய்துள்ளார்.

மெடிக்கல் செக்கப்

மெடிக்கல் செக்கப்

2 நாட்கள் இவர்கள் ரூம் போட்டு சுற்றியுள்ளனர்.. இந்த 2 நாட்களில் பலமுறை முகமது தன்னை பலாத்காரம் செய்ததாக சிறுமி போலீசாரிடம் சொல்லி இருக்கிறார்.. இப்போது அந்த முகமதுவை போலீசார் தூக்கி உள்ளே வைத்துள்ளனர்.. சிறுமிக்கு மெடிக்கல் செக்கப் செய்யப்பட்டு, ஒரு ஹோமில் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

ஏற்கனவே மக்கள் லாக்டவுனில் நொந்து போய் இருக்கிறார்கள்.. யார் கையிலும் காசு இல்லை.. எங்கேயும் போக முடியவில்லை.. இ-பாஸ் கிடைக்காமல் அவசரத்துக்கும் போக முடியாமல் தவித்து வருகின்றனர்.. "முதல் பிரசவ நேரத்தில் என் பக்கத்திலேயே இருங்க" என்று இளம்மனைவி கெஞ்சி கொண்டதற்காக காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒரு இளைஞர் இ-பாஸ்--க்காக சென்னை செல்வதற்காக படாத பாடு பட்டார். கடைசியில் பாஸ் கிடைக்காததால், தற்கொலையே செய்து கொண்டார்.

செல்போன் வாழ்க்கை

செல்போன் வாழ்க்கை

இப்படி லட்சக்கணக்கான மக்கள் அவஸ்தையில் இருக்கும்போது, ஒரு இளைஞர், இவ்வளவு தைரியமாக இ-பாஸ் இல்லாமல், ஊர் ஊராக சிறுமியை கடத்தி கொண்டு போய் சீரழித்த கொடுமையை என்னவென்று சொல்வது? முகமது போன்றவர்களை கண்காணிக்க வேண்டியுள்ளது.. அதேபோல் இந்த பெண்பிள்ளைகள் செல்போனில் வாழ்க்கையை தொலைத்து கொண்டிருப்பதையும் தடுக்க வேண்டி இருக்கிறது!

English summary
sexual harassment: youth arrested under posco near madurai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X