மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதுரைவாசிகளுக்கு தூக்கம் இல்லை... ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை!!

Google Oneindia Tamil News

மதுரை: தூக்கம் வராமல் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை பாலிசோம்னோகிராபி எனப்படும் சிகிச்சை முறையை அறிமுகம் செய்துள்ளது.

பாலிசோம்னோகிராபி சிகிச்சையில் ரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜன் அளவு, மூளையின் அதிர்வலைகள், இருதய துடிப்பு, மூச்சுவிடும் அளவு, கண் அசைவு, கால் நகர்வுகள் குறித்து ஆய்வு செய்யப்படும். இவற்றில் மாற்றம் ஏற்படும்போது, தூக்கமின்மை பிரச்சனையும் ஏற்படும்.

sleep disorders: Madurai GRH introduces polysomnography to treat the patients

மதுரையில் இருக்கும் அரசு ராஜாஜி மருத்துவமனையின் கண், தொண்டை, காது சிகிச்சைப் பிரிவில் இதற்கான கருவி பொருத்தப்பட்டுள்ளது. ரூ. 20 கோடி மதிப்பிலான இந்தக் கருவியை மருத்துவமனை டீன் டாக்டர் ஜெ. சண்முகமணி திறந்து வைத்தார். அப்போது இந்த துறையின் தலைவர் டாக்டர் என். தினகரன் உடன் இருந்தார்.

கமலா ஹாரிஸ் ரொம்ப மோசம்.. ஜோ பிடனை விட மோசம்.. டொனால்ட் ட்ரம்ப் ஆவேசம் கமலா ஹாரிஸ் ரொம்ப மோசம்.. ஜோ பிடனை விட மோசம்.. டொனால்ட் ட்ரம்ப் ஆவேசம்

தூக்கம் வராமல் கண்டுபிடிக்கும் பல்வேறு ஆய்வுகளான EEG, EOG, ENG, ECG and SPO2 ஆகியவையும் இந்த கருவிகள் மூலம் கண்டறியலாம். இந்த பரிசோதனையை தனியார் மருத்துவமனையில் மேகொள்ள ரூ. 3,000 முதல் ரூ. 5,000 வரை செலவாகும். ஆனால், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் இலவசமாக பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
sleep disorders: Madurai GRH introduces polysomnography to treat the patients
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X