Just In
மதுரையில் நாயை துடிதுடிக்க கொன்ற ஆட்டோ டிரைவர்.. வைரல் வீடியோ
மதுரை: நாய் ஒன்றை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் துடிதுடிக்க அடித்து கொல்லும் காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி உள்ளது.

மதுரை: நாயை அடித்தே கொல்லும் கல்நெஞ்ச மனிதர்.. வலைதளங்களில் வலம் வரும் கொடூர வீடியோ..!
மதுரையை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் விமல்ராஜ். நடுரோட்டில் கையில் கட்டையுடன் ஆவேசமாக நிற்கும் அவர் அங்குள்ள நாய் ஒன்றை அடித்து துன்புறுத்தி வதைக்கிறார். ஆவேச தாக்குதலில் அலறும் அந்த நாய் ஒரு கட்டத்தில் இறந்தே போகிறது.

அப்போதும் ஆத்திரம் தாங்காத அந்த மனிதர் சாக்குப் பையில் அந்த நாயை தூக்கி போட்டு கொண்டு செல்கிறார். பதைபதைக்க வைக்கும் காட்சிகளுடன் உள்ள வீடியோவை காண்பவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
இரக்கமற்ற கொடுஞ்செயலை அரங்கேற்றிய இந்த மனிதர் மீது நடவடிக்கை அவசியம் என்றும் நெட்டிசன்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழக முதலமைச்சருக்கு இந்த வீடியோவை டேக் செய்து நடவடிக்கைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.