மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இன்னும் செய்யுங்க.. அநீதியின் கைகளில் காலம் கட்டுண்டு கிடந்த வரலாறே இல்லை.. கொந்தளிக்கும் வெங்கடேசன்

காந்தியின் மலரஞ்சலி ரத்து செய்யப்பட்டதற்கு எம்பி வெங்கடேசன் ட்வீட் பதிவிட்டுள்ளார்

Google Oneindia Tamil News

மதுரை: தேசத்தந்தை மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடத்த வேண்டிய மலரஞ்சலி நிகழ்வை கொரோனாவைக் காரணங்காட்டி மத்திய அரசு ரத்து செய்துள்ளதற்கு எம்பி வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தற்போது நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வருகிறது.. இருந்தாலும் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.. அதேபோல லாக்டவுன் 5.0 தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாளுக்கு நாள் தொற்று தாக்கம் பெருகி வருவதுடன், குணமாகி வருவோரின் எண்ணிக்கையும் அதிகமாகித்தான் வருகிறது. இதனால், முக்கியமான நிகழ்வுகள், ஆலோசனை கூட்டங்கள், எல்லாமே வீடியோ கான்பரன்ஸ் மூலம்தான் நடந்து வருகிறது... ஜூம் ஆப் மூலம் இந்த கூட்டங்கள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.

Su Venkatesan objects cancellation of Gandhi tribute in Parliament

இந்நிலையில், நாளை மகாத்மா காந்தியின் பிறந்த நாள்.. வழக்கமாக மகாத்மாவின் பிறந்த நாளை நாடே கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம்.. நாடாளுமன்ற வளாகத்தில் உள் காந்தியின் சிலைக்கு மலரஞ்சலி செலுத்துவதும் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் நடைமுறை.. ஆனால் தற்போது தொற்று வீரியம் அதிகரித்துள்ளதால், மலரஞ்சலி ரத்தாகி உள்ளது.

இதற்கு மதுரை எம்பி வெங்கடேசன், ஆதங்கத்துடன் ட்வீட் போட்டுள்ளார்.. "தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு பிறந்தநாளை முன்னிட்டு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடத்த வேண்டிய மலரஞ்சலி நிகழ்வை #Corona காரணங்காட்டி ரத்து செய்துள்ளது மத்திய அரசு.. இன்னும் செய்யுங்கள்... ஆனால் காலம் அநீதியின் கைகளில் என்றென்றும் கட்டுண்டு கிடந்ததாக வரலாறும் இல்லை; புராணங்களும் இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.

Su Venkatesan objects cancellation of Gandhi tribute in Parliament

வெங்கடேசனின் இந்த ட்விட்டுக்கு பலரும் தங்கள் கருத்தையும் பதிவிட்டு வருகின்றனர்.. "அயோத்தி கோயில் கட்ட பூஜை நடத்த கொரானா தடையில்லை... அவர்கள் வைத்தது தான் சட்டம், திட்டம் எல்லாம்" என்று கமெண்ட்களை போட்டு வருகின்றனர்.

இதற்கும் ஐஎஸ்ஐ பின்னணி என்று கூறுவார்கள்.. பிசுபிசுக்க வைக்கும் வித்தை..சுக்பீர் சிங் பாதல் காட்டம்!இதற்கும் ஐஎஸ்ஐ பின்னணி என்று கூறுவார்கள்.. பிசுபிசுக்க வைக்கும் வித்தை..சுக்பீர் சிங் பாதல் காட்டம்!

எனினும், 2014ல் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, காந்தி பிறந்த தினமான ஆண்டுதோறும் அக்டோபர் 2ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது... காந்தியின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத வகையில் "தூய்மை இந்தியா திட்டம்" கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Su Venkatesan objects cancellation of Gandhi tribute in Parliament
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X