மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சாவி கொடுத்தது யார்.. கலெக்டருக்கு தெரியாமல் எதுவும் நடந்திருக்காது.. அவரை மாத்துங்க.. சு.வெங்கடேசன்

மதுரை மாவட்ட கலெக்டரை மாற்ற வேண்டும் என சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Google Oneindia Tamil News

மதுரை: ஆவணங்கள் இருந்த ரூம் சாவியை தந்தது யார்? சாவியை கலெக்டருக்கு தெரியாமல் தந்திருக்க வாய்ப்பே இல்லை.. அதனால் மதுரை மாவட்ட கலெக்டரை உடனே மாற்ற வேண்டும் என்று சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

தாசில்தார் சம்பூர்ணம் தபால் வாக்குகள் மற்றும் தேர்தல் பதிவு ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்து.. ஆவணங்களை ஜெராக்ஸ் எடுத்து சென்றுள்ளளார்.

Su Venkatesan says about Madurai Collector Nataraj

இந்த விஷயத்தை அங்கு கண்காணிப்பு பணியில் இருந்த கட்சியினர் கண்டுபிடித்து சிபிஎம் வேட்பாளர் வெங்கடேசனுக்கு தகவல் சொன்னார்கள்.

விழித்திரை அறுவை சிகிச்சை குறித்த உலக மாநாடு.. சென்னையில் கூடிய கண் மருத்துவர்கள் விழித்திரை அறுவை சிகிச்சை குறித்த உலக மாநாடு.. சென்னையில் கூடிய கண் மருத்துவர்கள்

இதையடுத்து முதலில் இந்த விஷயத்தில் கொதித்தெழுந்தது சம்பவ இடத்துக்கு கட்சியினருடன் திரண்டது சு.வெங்கடேசன்தான்! "இவ்ளோ பாதுகாப்பு இருந்தும், வாக்கு எண்ணும் மையத்துக்கு தாசில்தார் வரவேண்டிய அவசியம் என்ன? எதுக்கு வரணும்? தபால் வாக்குகளில் முறைகேடு நடந்துள்ளதாக சந்தேகம் வருகிறது. அந்த ரூம் சீல் செய்யப்படவில்லை. இதை பற்றி புகார் சொல்லலாம் என்றால் கலெக்டர் ரொம்ப நேரத்தக்கு லைனில் வரவே இல்லை" என்றார்.

இந்நிலையில், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜியுடன் வெங்கடேசன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஆவணங்கள் இருந்த அந்த அறையின் சாவியை தந்தது யார்?

அறையின் சாவியை கலெக்டருக்கு தெரியாமல் கொடுத்திருக்க வாய்ப்பே இல்லை. வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெற வேண்டுமானால், மதுரை கலெக்டர் நடராஜனை மாற்ற வேண்டும்" என்று வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

English summary
CPM Candidate Su Venkatesan has demanded that the Madurai Collector Nataraj be changed immediately
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X