தமிழக அரசியலில் விரைவில் மாற்றம்.. எப்படி தெரியுமா? இந்து முன்னணி காடேஸ்வரா சுப்பிரமணியம் பகீர்
மதுரை: தமிழக அரசியல் விரைவில் தற்போதய மகாராஷ்டிரா அரசியல் போல் மாற உள்ளது, இதற்கு பின்னணியில் ஒருவர் இருப்பார் என்று இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசு முதலமைச்சர் ஸ்டாலின் எப்போது மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறுவதை நிறுத்துகிறாரோ அப்போது தான் ஸ்டாலினை தமிழக முதல்வர் என நாங்கள் அழைப்போம் அதுவரை கவர்னரின் ஆலோசகர் என நாங்கள் அழைப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகர இந்து முன்னனி சார்பில் மதுரை ஜான்சிராணி பூங்கா திடலில் நடைபெற்ற பிரச்சார பயண பொதுக்கூட்டத்தில் இந்து முன்னனியின் மாநில நிர்வாகிகள் மதுரை மாவட்ட தலைவர் அழகர்சாமி இந்து முன்னனி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாளை ரொம்ப முக்கியம்.. என்ன பண்ணலாம்? விசாரித்த எடப்பாடி.. 3
திருச்செந்தூரிலிருந்து சென்னை வரை நடைபெறும் இந்துக்களின் உரிமை மீட்க பிரச்சார பயணத்தினை வரவேற்ற மதுரை மாநகர், புறநகர் மாவட்ட இந்து முன்னனியினர் இந்து முன்னனி மாநில தலைவர்
காடேஸ்வரா சுப்பிரமணியனுக்கு ஆள் உயர மலர்மாலை, செங்கோல், வீர வாள் உள்ளிட்டவற்றை பரிசாக வழங்கினார்கள்.

இந்து முன்னணி காடேஸ்வரா சுப்ரமணியன்
பொதுக்கூட்டத்தில் பேசிய காடேஸ்வரா சுப்பிரமணியம், தமிழ்நாடு அரசு முதலமைச்சர் ஸ்டாலின் எப்போது மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறுவதை நிறுத்துகிறாரோ அப்போது தான் ஸ்டாலினை தமிழக முதல்வர் என நாங்கள் அழைப்போம் அதுவரை கவர்னரின் ஆலோசகர் என நாங்கள் அழைப்போம். தமிழகத்தில் விரைவில் ஸ்டாலின் ஆட்சி முடிவடையும் ஏன் என்றால் செந்தில் பாலாஜி 40 எம்.எல்.ஏ.களின் ஆதரவை வைத்து உள்ளார் என தகவல்கள் கூறுகிறது. தமிழக அரசியல் விரைவில் தற்போதய மகாராஷ்டிரா அரசியல் போல் மாற உள்ளது

பெரியார் சிலைகள்
மன்னார்குடி ஜீயர் கோவில்களின் முன்னால் உள்ள ஈ.வெ.ரா பெரியார் சிலைகளை அகற்ற வேண்டும் இல்லையெனில் நானே அகற்றுவேன் என கூறிய அவரது தைரியத்தை இந்து முண்ணனி வரவேற்கிறது அவருக்கு இந்து முன்னனி துணை நிற்கும். இஸ்லாமிய பெண்கள் பர்தா போடுவதை அவர்களே விரும்பவில்லை ஆகவே அவர்களுக்கு பர்தாவிலிருந்து சுதந்திரம் தர வேண்டும் என்றார்.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காடேஸ்வரா சுப்பிரமணியம், கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகள் விநாயகர் சதுர்த்தி ஊர்வலதினை இந்து முன்னணி நடத்தாமல் இருந்தது. இந்த வருடம் இந்து முன்னணியின் சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் எந்தவித தடையும் இன்றி கிராமங்கள் தோறும் நகரங்கள் தோறும் விநாயகர் சிலைகள் வைத்து விநாயகர் ஊர்வலம் இந்து முன்னணி சார்பில் நடைபெறும்.

தமிழகம் முழுவதும் ஊர்வலம்
இந்து முன்னணியின் மாநில தலைவராக ராமகோபாலன் ஜி இருக்கும்பொழுது ஒரு விநாயகர் வைத்து சென்னையில் விநாயகர் ஊர்வலத்தை துவங்கினார் தற்போது லட்சக்கணக்கான விநாயகர்களை வைத்து இந்து முன்னணி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை கொண்டாடுகிறது. இந்த வருடம் எந்த தடையும் இன்றி விநாயகர் ஊர்வலம் நடப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்து முன்னணி எடுத்து வருகிறது.

தமிழகத்தில் அரசியல் மாற்றம்
தமிழக அரசியலில் ஸ்டாலினுக்கு போட்டியாக விரும்பும் ஒருவர் 40 முதல் 50 எம்.எல்.ஏ.க்களை கையில் வைத்திருக்கிறார் என உளவுத்துறை தகவல்கள் கூறுகிறது. ஸ்டாலின் மற்றும் தி.மு.கவினர் நினைப்பதெல்லாம் அவரது மகனை அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என்பது. எனவே வாரிசு அரசியலுக்கு எதிராக தமிழகத்தில் மகாராஷ்டிராவில் நடந்த அரசியல் யுத்தத்தை போல நடக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியுள்ளார்.