• search
மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

பிரம்மஹத்தி தோஷத்தில் சனி விமான விபத்துகள் நடக்கும் - காரணத்தோடு எச்சரித்த பஞ்சாங்கம்

|

மதுரை: கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி, சேர்க்கை பார்வை ஆகியவை இந்த பூமியில் சில மாற்றங்களை ஏற்படுத்தும். நட்சத்திரங்களில் பயணிக்கும் கிரகங்களை வைத்தும் எந்த ராசியில் எந்த கிரகங்கள் சேரும் போது என்ன மாதிரியான பாதிப்பு ஏற்படும் என்பதை பஞ்சாங்கம் மூலம் நமது முன்னோர்கள் கணிக்கின்றனர். தமிழ் பஞ்சாங்கத்தில் மழை, வெள்ளம், புயல், விமான விபத்துக்கள், தீ விபத்துகள் பற்றியும் கணித்துள்ளனர். வாக்கியப்பஞ்சாங்கப்படி சனி பகவான் குரு வீட்டில் அமர்ந்து பிரம்மஹத்தி தோஷம் பெறுவதால் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நிகழும் என்று பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு பிறந்தது முதலே சரியில்லை ரொம்ப மோசமான ஆண்டாக இருக்கிறது என்று பலரும் புலம்பிக்கொண்டிருக்கின்றனர். பலரையும் விரக்தியின் உச்சத்திற்கு கொண்டு போய் விட்டது நடக்கும் சம்பவங்கள் எல்லாம். கொரோனா வைரஸ் உலகத்தையே முடக்கி போட அவ்வப்போது இயற்கையும் தனது கோபத்தை வெளிப்படுத்தி வருகிறது.

கடவுளின் தேசம் கேரளாவில் கொரோனா வைரஸ், கடும் மழை வெள்ளச்சேதம் பாதித்து வரும் நிலையில் திடீர் நிலச்சரிவு பல உயிர்களை காவு கொண்டது. இப்போது விமான விபத்தும் நிகழ்ந்து பலரையும் பதைபதைக்க வைத்துள்ளது. 2020 ஆம் ஆண்டு பிறந்தது முதலே சரியில்லை என்றால் ஆகஸ்ட் மாதம் படு மோசமாக இருக்கிறதே என்றும் பலரும் வேதனையோடு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

கேரளாவில் பதற வைக்கும் கோழிக்கோடு விமான விபத்து.. பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு கேரளாவில் பதற வைக்கும் கோழிக்கோடு விமான விபத்து.. பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு

பாதிப்பு வரும் என கணித்த பஞ்சாங்கம்

பாதிப்பு வரும் என கணித்த பஞ்சாங்கம்

சார்வரி வருடத்தில் இதுபோன்ற மோசமான சம்பவங்கள் நடைபெறும் என்று முன்பே தமிழ் பஞ்சாங்கம் கணித்துள்ளது. இதற்குக் காரணம் கோச்சார ரீதியாக கிரகங்களின் பயணமும் கூட்டணியும் பார்வையும்தான். சார்வரி வருடத்தில் சூறாவளி காற்று ஆலங்கட்டி மழை, இடி முழக்கம்,மே கர்ஜனை, மேற்கு திக்கில் இந்திர வில்லும், சென்னை, மும்பை, கொல்கத்தா,ஒடிசா, உத்தரகாண்ட், பீகார், தென் தமிழகம், வட தமிழகத்தில் மழை பெய்யும் என பஞ்சாங்கம் கணித்துள்ளது.

வான் மண்டலத்தில் அகால மரணங்கள்

வான் மண்டலத்தில் அகால மரணங்கள்

பஞ்சமாதிபதியான சனி இந்த ஆண்டு இரஸாதிபதி பதவி பெற்று நிற்பதும் குரு வீட்டில் இருந்து பிரம்மஹத்தி தோஷம் பெறுவதால் சனி அம்சையில் குரு வீட்டில் நிற்பதால் ரயில் விபத்துகள், விமான விபத்துகள் நடுக்கடலில் பெரிய அளவில் அபாயம் ஏற்படும். வான் மண்டலத்தில் அக்னி சுழற்சியால் அகால மரணங்கள் அடிக்கடி நடைபெறும்.

எதனால் இந்த பாதிப்பு

எதனால் இந்த பாதிப்பு

ஆனி மாதம் உத்தரயணத்தில் காலையில் சூரியகிரகணம் ஏற்பட்டது இதனால் சூறாவளி காற்று, ஆலங்கட்டி மழை, புழுதிக்காற்றால் கடும் பாதிப்பு ஏற்படும். இந்தோனேசியாவிற்கு கிழக்கே வங்கக்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டு இயற்கை சீற்றம் அடைய நேரும். நெல், அரிசி, தானியம், மாட்டுத்தீவன பொருட்களில் விலை திடீரென உயரும்.

குழந்தைகளுக்கு பாதிப்பு

குழந்தைகளுக்கு பாதிப்பு

சூறாவளி புயலால் கடலில் வாழும் சுறாமீன் மற்றும் நட்சத்திர ஆமைகள் கடல் குதிரை போன்றவை மடிய நேரிடும். புதிய வைரஸ் நோய் உற்பத்தி ஆகும். குழந்தைகளுக்கு கொசுவினால் நோய் உண்டாகும் என்றும் என்றும் பஞ்சாங்கம் கணித்துள்ளது. பஞ்சாங்கம் கணித்தது போல கொரோனாவை தவிர இப்போது புதிய வகை வைரஸ் நோயும் தாக்கி வருகிறது.

English summary
Sarvari Tamil varudam Arcot Panchangam 2020-2021 penned by KN Sundararajan predicted rain, plane crash in this year. Sani sitting in Guru house this called brahmahathi Dosha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X