மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா.. வழக்கத்துக்கு மாறாக தமிழ்த்தாய், தேசிய கீதம் மிஸ்ஸிங்!

Google Oneindia Tamil News

Recommended Video

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய மோடி

    மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தபோது அங்கு தமிழ்த்தாய், தேசிய கீதமும் இசைக்கப்படாத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதையொட்டி காலை 11.30 மணிஅளவில் மதுரை விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி வந்தார்.

    அங்கு அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர், துணை முதல்வர், நாடாளுமன்ற சபாநாயகர் தம்பிதுரை, மத்திய அமைச்சர்கள், உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

    பரிசு

    பரிசு

    அங்கிருந்து கறுப்பு கார் மூலம் தோப்பூர் வந்தார் பிரதமர் மோடி. விழா மேடையில் மீனாட்சியம்மன் சிலையை முதல்வர் பிரதமருக்கு நினைவுப் பரிசாக வழங்கினார்.

    டெல்லி போல் மதுரை

    டெல்லி போல் மதுரை

    இந்த விழாவில் பேசிய மோடி தனது அரசின் சாதனைகளை பேசினார். பின்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை போல் மதுரை எய்ம்ஸ் அமையும் என்று தெரிவித்தார்.

    பொது கூட்டம்

    பொது கூட்டம்

    இந்த நிலையில் மோடி எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று இந்தியில் பேசவில்லை. மாறாக ஆங்கிலத்திலேயே பேசினார். இதே நிலைதான் பாஜக பொதுக் கூட்டத்திலும் நடந்தது.

    தேசிய கீதம்

    தேசிய கீதம்

    பொதுவாக அரசு விழாக்கள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி தேசிய கீதத்துடன் முடிக்கப்படும். ஆனால் இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடவில்லை, தேசிய கீதமும் இசைக்கப்படவில்லை. இதை பார்த்த பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

    English summary
    National Anthem and Tamil thai are not playing in Madurai Aiims hospital stone lay foundation function.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X