மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மிட்டாய் கலர் ஸ்கூட்டர்.. கையில் பாஜக கொடி.. சிரிப்புடன் தமிழிசை.. மீண்டும் மோடி வேண்டும் மோடி!!

மதுரையில் இரு சக்கர வாகன பேரணியில் தமிழிசை சவுந்தராஜன் பங்கேற்றார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மதுரையில் இரு சக்கர வாகன பேரணியில் தமிழிசை சவுந்தராஜன்-வீடியோ

    மதுரை: ஆரஞ்சு கலர் ஸ்கூட்டரில் கையில் பாஜக கொடியை பிடித்தவாறே ஒரு ரெய்டு போய் வந்திருக்கிறார் தமிழிசை சவுந்தரராஜன்.

    நேற்று பாஜக மகளிரணி சார்பில், "மீண்டும் மோடி- வேண்டும் மோடி" என்ற பெயரில் மத்திய அரசின் சாதனை விளக்க இரு சக்கர வாகன பேரணி மதுரையில் நடந்தது.

    தல்லாகுளம் பெருமாள் கோயில் அருகே இருந்து இப்பேரணி துவங்க இருந்தது. பெண்கள் வரிசை கட்டி கொண்டு ஸ்கூட்டரோடு தயாராக நின்றிருக்க, தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஒரு கையில் தாமரையை பிடித்து கொண்டு, மற்றொரு கையால் பாஜக கொடி அசைத்து இதனை தொடங்கி வைத்தார்.

    ஹெல்மட்

    ஹெல்மட்

    பிறகு அங்கிருந்தவர்கள் ஸ்கூட்டரில் ஏறி சிறிது தூரம் செல்லுமாறு வேண்டுகோள் விடுத்தனர். அதில் முதலாவதாக நின்றிருந்த பெண்ணின் ஸ்கூட்டரின் பின்னால் தமிழிசை உட்கார்ந்து கொண்டார். ஏறுவதற்கு முன்பு மறக்காமல் ஹெல்மட்டும் போட்டுக் கொண்டார்.

    சிரிப்பு

    சிரிப்பு

    ஒரு கையால் வண்டி ஓட்டும் பெண்ணின் தோள்பட்டையை பிடித்து கொண்டே, இன்னொரு கையால் பாஜக கொடியை அசைத்து கொண்டே சென்றார். கூடவே ட்ரேட் மார்க் சிரிப்பும் சேர்ந்து பயணித்தது.

    ஆரவாரம்

    ஆரவாரம்

    சுற்றி இருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்ய ஸ்கூட்டர் மெதுவாக நகர தொடங்குகிறது. பிறகு கொஞ்ச தூரம் சென்றதும் ஸ்கூட்டரில் இருந்து கீழே இறங்கிவிட்டார் தமிழிசை.

    ஆரஞ்சு கலர்

    ஆரஞ்சு கலர்

    ஆனால் தமிழிசை ஏறி சென்ற ஸ்கூட்டர்தான் ஆரஞ்சு கலர் என்றால், அவரை வண்டியில் ஏற்றி சென்ற பெண்ணும் ஆரஞ்சு கலர் சுடிதார், பாஜக கொடி என சுற்றிலும் அந்த இடமே ஒரே காவி மயமாகி காணப்பட்டது.

    English summary
    Tamilisai Soundarajan Two Wheeler Ride in Madurai Rally
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X