உலகத்தை மனிதத்தை அழகாக்குவது இவரை போல சில மனிதர்கள் தான்.. வீடியோவை பாருங்கள்
மதுரை: மதுரையில் இருந்து கோவை சென்ற அரசு பேருந்து ஒன்றில் நடத்துனர் சிவசெல்வம் என்பவர் கனிவுடன் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் நடத்துனர் சிவசெல்வம் பேசுகையில், பயணிப்பதற்கு அரசு போக்குவரத்து கழகத்தை விரும்பி தேர்ந்தெடுத்தமைக்கும், உங்களோடு பணிபுரிய எங்களுக்கு வாய்ப்பு கொடுத்தமைக்கும் அனைவருக்கம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
நமது அரசு ஒரு நல்ல பேருந்தை, அழகான பேருந்தை பயணிக்க போட்டிருக்கிறார்கள். அந்த பேருந்தை சுத்தமாக வைப்பதிலும், பழுது ஏற்படுத்தாமல் இருக்க வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும் இருக்கிறது.
நிவர் வரும் போது.. வராது பவர்.. மின்துறை அமைச்சர் தங்கமணி அறிவிப்பு..!

பேருந்து பயணத்தில் வாந்தி
என்னது இது, கண்டக்டர் பேருந்தை சுத்தமாக வையுங்கள் என்று சொல்கிறாரே என்று சங்கடப்பட வேண்டாம். நீங்கள் சாப்பிடும் பொருட்களின் கவர்கள், பாட்டில்கள் போன்றவற்றை பேருந்தில் தொங்கவிட்டுள்ள பையில் போடுங்கள். பேருந்து பயணித்தின் போது சிலருக்கு அசவுகரியம் ஏற்படும். வயிற்றை பிரட்டி வந்தி வரும், அப்படி ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள். உங்களுக்கு புளிப்பு முட்டை கொடுக்கிறேன். கவர் கொடுக்கிறேன். இது நம்முடைய பேருந்து நாம் சுத்தமாக வைத்துக்கொள்ளலாம். அதற்காக சொன்னேன். சங்கடப்பட்டுக்கொள்ள வேண்டாம்.

கோவை பேருந்து கட்டணம்
இந்த பேருந்தில் பயணிக்க பயணக்கட்டணத்தை இப்போது பார்ப்போம். இந்த பேருந்து வாடிப்பட்டி வழியாக செல்கிறது. வாடிப்பட்டி 22 ரூபாய். திண்டுக்கல் பைப்பாஸ் 60 ரூபாய். ஒட்டன்சத்திரம் 82 ரூபாய், தாராபுரம் 115 ரூபாய், பல்லடம் 150 ரூபாய், கோவை 170 ரூபாய். முடிந்தவரை சில்லறை கொடுத்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

கனிவான பேச்சு
பலதரப்பட்ட மக்கள் இந்த பேருந்தில் பயணிப்பீர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நோக்கத்துடன் செல்வீர்கள். ஸ்கூல், காலேஜ், கோயில் விசேசம், பண்டிகை விசேசம் என பல்வேறு விஷேசங்களுக்கு போய் வருவீர்கள். உங்கள் பயணம் வெற்றிகரமாக அமைய அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாகவும், இந்த பேருந்திலே பணிபுரிகின்ற ஓட்டுனர் மகேந்திரன் அவர்களின் சார்பாகவும், நடத்துனர் சிவசெல்வம் சார்பாகவும் வாழ்த்துக்கள் தெரிவிப்பதுடன், உங்களோடு பயணிக்கவும், உங்களுக்காக பணிபுரியவும், உங்கள் முன் நின்று பேசவும், வாய்ப்பளித்ததற்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். சாந்தோஷமாக போகலாம்" இவ்வாறு நடத்துனர் சிவசெல்வம் கூறினார்.

பலர் பாராட்டு
இந்த வீடியோ ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவ வருகிறது. பலரும் நடத்துனர் சிவசெல்வத்தை பாராட்டி வருகிறார்கள். இன்று இவரைப் போல தனது வேலையை நேசித்து பணியாற்றுபவர்கள் மிகவும் குறைவு...... அனைவரும் இவரை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொண்டு நாமும் நமது பணியினை நேசித்து பணிபுரிய வேண்டும் என்று சமூக வலைதங்களில் பாராட்டு குரல்கள் அதிகமாக உள்ளது. மேலும் வீடியோவை பல ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.