மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பஸ்சை நிறுத்துகிறேன், புளிப்பு மிட்டாய் தருகிறேன்.. அசத்தும் அரசு பஸ் கண்டக்டர்.. பாராட்டும் பயணிகள்

Google Oneindia Tamil News

மதுரை: நீங்களே கண்ணை கசக்கி பார்ப்பீர்கள், காண்பதெல்லாம், உண்மைதானா, அல்லது கனவுதானா என்பதை.. அப்படி ஒரு இன்ப அதிர்ச்சி சம்பவம்தான் இப்போது வீடியோவாக சுற்றி வருகிறது.

மதுரையிலிருந்து கோவை நோக்கி பயணித்துக் கொண்டு இருக்கிறது அந்த அரசு பேருந்து. பார்த்தால் புத்தம் புதிதாக வாங்கப்பட்ட பஸ் என்பது நன்கு தெரிகிறது. அப்போது சிரித்த முகத்தோடு, நடத்துனர், சிவ சண்முகம் பயணிகளை நோக்கி பேச ஆரம்பிக்கிறார்.

Tamilnadu government Bus conductor speech goes viral

புத்தம் புதிய அழகான, பஸ்சை தமிழக அரசு வாங்கி தந்துள்ளது. அதை சுத்தமாக வைத்துக்கொள்ளும் பொறுப்பு நமக்கு இருக்கு. பேப்பர், பாட்டில் போன்றவற்றை பஸ் உள்ளே போடாதீர்கள். 200 கி.மீ பயணிக்க உள்ளோம்.

ஒரு சிலருக்கு வாந்தி போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். அப்படி யாருக்காவது அசவுகரியமாக உணர்ந்தால், சொல்லுங்கள். பஸ்சை ஒரு நிமிஷம் ஓரத்தில் நிறுத்தச் சொல்கிறேன்.

புளிப்பு மிட்டாய் தருகிறேன். கவர் கொடுக்கிறேன். நமது பேருந்து, நாம் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் சொல்கிறேன். யாரும் சங்கடப்படாதீர்கள். இப்படி தன்மையாக பேசும் நடத்துனர் சிவ சண்முகம், எந்தெந்த ஊருக்கு எவ்வளவு கட்டணம் என்பதையும், அவர் விவரமாக சொல்லி, உரிய சில்லரை தரும்படி கேட்டுக்கொள்கிறார்.

அத்தோடுவிட்டாரா.. நீங்கள் எத்தனையோ விஷயங்களுக்காக பஸ்சில் பயணிப்பீர்கள். நீங்கள் செல்லும் காரியங்கள் வெற்றியடைய ஓட்டுநர் சதாசிவம் மற்றும் நான் இருவருமே வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறோம். இப்படி பேசுகிறார் சிவ சண்முகம்.

ஒன்றரை பாட்டில் விஸ்கி.. கூல்ட்ரிங்சில் கலந்து.. வாயில் ஊற்றி.. பிரியங்கா ரெட்டிக்கு நேர்ந்த கொடுமைஒன்றரை பாட்டில் விஸ்கி.. கூல்ட்ரிங்சில் கலந்து.. வாயில் ஊற்றி.. பிரியங்கா ரெட்டிக்கு நேர்ந்த கொடுமை

இதை கேட்ட பயணிகள் கை தட்டி.. சூப்பர் சார் என புகழ்கிறார்கள். பயணி ஒருவர் இதை வீடியோவாக எடுக்க அது இப்போது வாட்ஸ்அப் ஸ்டேடஸ்கள், டுவிட்டர், பேஸ்புக் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.

English summary
A government bus conductor speech inside the bus which was travel from Madurai to Coimbatore goes viral.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X