மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இன்று ஒரு நாள் நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் ரத்து செய்யலாம்.. ஹைகோர்ட் கிளை பரிந்துரை

Google Oneindia Tamil News

மதுரை: கொரோனா பரவி வரும் நிலையில், தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்க இன்று ஒருநாள் விதிவிலக்கு வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறது.

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பை, இன்று ஒரு நாள் நிறுத்த உத்தரவிடக் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முறையீடு செய்யப்பட்டது.

Tamilnadu government to consider toll free journey on today: High Court

தமிழகத்தில், 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது. எனவே வரை போக்குவரத்து அமலில் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது. எனவே ஊருக்கு மக்கள் வேகமாக செல்ல வேண்டிய தேவையுள்ளது. சுங்கச் சாவடிகளில் வாகனங்களை நிறுத்தி கட்டண பரிமாற்றம் செய்தால், கொரோனா பரவ வாய்ப்பு உள்ளது. எனவே, இன்று ஒரு நாள், கட்டணம் வசூலிக்க தடை விதிக்க அரசு, உத்தரவிட வேண்டும் என்று ராஜகோபால் என்பவர் பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.

கொரோனா.. திருச்சியில் காவல்துறையின் தீவிர கண்காணிப்பில் 190 பேர்.. காவல் ஆணையா் வி. வரதராஜூ பேட்டி கொரோனா.. திருச்சியில் காவல்துறையின் தீவிர கண்காணிப்பில் 190 பேர்.. காவல் ஆணையா் வி. வரதராஜூ பேட்டி

இதை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, இன்று ஒரு நாள் மட்டும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளனர். தமிழக அரசு இதை பரிசீலிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

English summary
High court Madurai bench asking Tamilnadu government to consider toll free journey on today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X