மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் தடுப்புக்கு நடவடிக்கை என்ன? அறிக்கை கேட்டு ஹைகோர்ட் அதிரடி

Google Oneindia Tamil News

Recommended Video

    டெங்கு, பன்றிக் காய்ச்சல் தடுப்புக்கு நடவடிக்கை என்ன? ஹைகோர்ட் அதிரடி- வீடியோ

    மதுரை: தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய, சுகாதாரத்துறை செயலாளருக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை, உத்தரவிட்டுள்ளது.

    மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில், ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது என்றும், பலர் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போதிய மருந்து மாத்திரைகளை இருப்பு வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

    Tamilnadu health department secretary to submit a detail report over dengue and H1N1 fever: HC

    இன்று இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை, டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலால், உயிரிழந்தோர் எண்ணிக்கை, காய்ச்சலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், குறித்து விரிவான அறிக்கையை தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வரும் 20-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.

    English summary
    High Court Madurai bench, asks Tamilnadu health department secretary to submit a detail report over dengue and H1N1 fever issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X