மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழக இளைஞர்களே ஜாக்கிரதை.. அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.. மோடி அறிவுரை!

தமிழகத்தில் எதிர்மறை பிரச்சாரங்களை முன்னெடுப்போரிடம் தமிழக இளைஞர்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய மோடி

    மதுரை: தமிழகத்தில் எதிர்மறை பிரச்சாரங்களை முன்னெடுப்போரிடம் தமிழக இளைஞர்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    மதுரையில் இன்று பாஜக சார்பில் பெரியன் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார். இதில் மோடி முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பேசினார். பிரதமர் மோடி 20 நிமிடம் பேசினார்.

    பாஜக தேசிய செயலாளர் அவரது உரையை மொழிபெயர்த்தார். மதுரை தோப்பூரில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பின் அவர் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    இடஒதுக்கீடு பேட்டி

    இடஒதுக்கீடு பேட்டி

    மோடி தனது உரையில், 10 சதவிகித இடஒதுக்கீடு விஷயத்தில் தமிழக கட்சிகள் சில தவறான தகவல்களை தருகிறது. மக்களிடமும் சிலர் பொய்யான தகவல்களை அளிக்கிறார்கள். மத்திய அரசின் நல்ல எண்ணத்தை தவறாக சித்தரிக்க இப்படி பேசுகிறார்கள். இந்த இடஒதுக்கீட்டால் மற்ற சாதியினர் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள்.

    எதிர்மறை பிரச்சாரம்

    எதிர்மறை பிரச்சாரம்

    எதிர்மறை பிரச்சாரங்களை முன்னெடுப்போரிடம் தமிழக இளைஞர்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் என்னை வந்து பார்த்தனர். தங்கள் சமூகத்திற்கு நியாயம் வேண்டும் என்று கேட்டுள்ளனர். மாநில அரசாங்கம் இதுதொடர்பாக பரிசீலிக்க கேட்டுக்கொண்டுள்ளேன்.

    ஊழல் கட்சி

    ஊழல் கட்சி

    ஊழல் செய்யும் கட்சிகளுக்கு எதிராக நாங்கள் போராடுவோம். ஊழல் சக்திகளுக்கு மக்கள் ஆதரவு அளிக்க கூடாது. சென்னையில் இருந்து டெல்லி வரை இதற்காக நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதனால் பலர் பயந்து போய் இருக்கிறார்கள். இது பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நான் ஏழைகளுடன் இருக்கிறேன்.

    நான் இருக்கிறேன்

    நான் இருக்கிறேன்

    தவறான பிரச்சாரங்களை மக்கள் கருத்தில் கொள்ள கூடாது. யாரும் எங்களை எதிர்க்க கூடாது. பயத்தாலும், எதிர்மறை எண்ணங்களாலும் எனக்கு எதிராக ஒன்று திரண்டுள்ளோர். மோசமானவர்களை புறந்தள்ளுங்கள். நான் உங்கள் பக்கம் இருக்கிறேன்.. பாரத் மாதா கீ ஜெ.. வணக்கம் என்று மோடி தனது உரையை நிறைவு செய்தார்.

    English summary
    Tamilnadu youths have to be vigilant about bad forces says PM Modi in the grand BJP function in Madurai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X