மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இவிஎம் இயந்திரங்கள் உள்ள இடத்தில்.. லேட்டாப்புடன் நுழைந்த 'அவர்கள்'... மதுரையில் திடீர் பரபரப்பு

Google Oneindia Tamil News

மதுரை: வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மதுரை அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தினுள் லேப்டாப்புடன் சில பல்கலைக்கழக ஆசிரியர்கள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. வரும் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இதையடுத்து வாக்கு இயந்திரங்கள் அணைத்தும் பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு சீல் வைக்கப்பட்ட அறைகளில் பாதுகாக்கப்படுகிறது.

ஸ்டோரேஜ் அறைகளில் ஒரே மாதிரி நடக்கும் 'மர்ம' சம்பவம்.. ஹேக் செய்ய முயற்சி.. ஸ்டாலின் பகீர் புகார்ஸ்டோரேஜ் அறைகளில் ஒரே மாதிரி நடக்கும் 'மர்ம' சம்பவம்.. ஹேக் செய்ய முயற்சி.. ஸ்டாலின் பகீர் புகார்

அத்துமீறி நுழைவதாகப் புகார்

அத்துமீறி நுழைவதாகப் புகார்

இருப்பினும், பாதுகாப்பு அறைகளில் சிலர் அத்துமீறி நுழைவதாக அவ்வப்போது புகார்கள் எழுந்துள்ளன. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட கீழக்குயில்குடி பகுதியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தில் உசிலம்பட்டி மற்றும் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள.

லேப்டாப்புடன் நுழைந்த சிலர்

லேப்டாப்புடன் நுழைந்த சிலர்

இந்நிலையில் இன்று மதியம் பல்கலைக்கழக வளாகத்தில் லேப்டாப்புடன் சிலர் புகுந்ததாக சோழவந்தான் தொகுதி திமுக வேட்பாளர் வெங்கடேசனுக்கு அக்கட்சி தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சோழவந்தான் தொகுதி திமுக வேட்பாளர் வெங்கடேசன் தனது ஆதரவாளர்களுடன் பல்கலைக்கழகத்திற்கு விரைந்து வந்து, சம்மந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு புகார் அளித்தார்.

யார் அவர்கள்

யார் அவர்கள்

திமுக வேட்பாளர் புகார் அளித்ததன் அடிப்படையில் சோழவந்தான் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாடிப்பட்டி துணை காவல் கண்காணிப்பாளருடன் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் விராசணையில் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப் பல்கலைக்கழக ஆசிரியர்களே லேப்டாப்புடன் சென்றுள்ளது தெரியவந்தது. மேலும், அவர்கள் தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறையின் உரிய அனுமதி பெற்றிருந்ததும் தெரியவந்தது.

புகார் அளிக்கவுள்ளோம்

புகார் அளிக்கவுள்ளோம்

இருப்பினும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகத்திற்குள்ள வேட்பாளர்கள் கவனத்திற்குக் கொண்டு செல்லாமல் ஆசிரியர்களை உள்ளே அனுமதித்தற்கு மாவட்ட ஆட்சியரிடம் நாளை எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிக்கவுள்ளதாகவும் இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடர உள்ளதாகவும் சோழவந்தான் தொகுதி வேட்பாளர் வெங்கடேசன் கூறியுள்ளார்.

English summary
Some Teachers suddenly went inside Madurai Anna University where voting machines were kept
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X