• search
மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

வயிறு எரியுதா.. நல்லா எரியட்டும்.. கீழடி ஆய்வை நிறுத்த மாட்டோம்.. விட்டு விளாசிய தங்கம் தென்னரசு!

Google Oneindia Tamil News

மதுரை: தமிழர்களின் தொன்மை பற்றி அகழாய்வு பணிகள், அறிவியல்பூர்வமான ஆதாரங்களை வழங்கி வருவதால் சிலருக்கு வயிறு எரிகிறது, அதைப்பற்றி நமக்கு கவலை கிடையாது, தொடர்ந்து அகழாய்வு நடைபெறும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

  வயிறு நல்லா எரியட்டும்.. Keezhadi ஆய்வை நிறுத்த மாட்டோம்.. தங்கம் தென்னரசு அதிரடி!

  கீழடி உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்களின் தொன்மையை பறைசாற்றும் வகையிலான பல்வேறு புராதன பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் ஒரு வார இதழில், வெளியான கட்டுரையில், இந்த அளவுக்கு அகழாய்வுக்காக பணம் செலவிடப்படுவது தேவையற்றது. கொரோனா காலத்தில் மக்கள் கஷ்டப்படும் நிலையில் இந்த மாதிரி அகழாய்வுப் பணிகள் தேவைதானா. வேட்டியை அவிழ்த்தா தலைப்பாகை கட்டுவது என்பது போல எல்லாம் எழுதப்பட்டு இருந்தது.

  இதனிடையே, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பேட்டியில் இதுகுறித்து கூறியதாவது:

  தமிழ் வளர்ச்சி, தமிழின பண்பாடு, தமிழர் நாகரிகத்தின் தொன்மை போன்றவற்றுக்கு மாபெரும் சிறப்பு இருக்கிறது. அந்த சிறப்பு இலக்கியச் சான்றுகளில் மட்டும் அல்லாமல் வரலாற்றுச் சான்றுகளிலும் இருக்கிறது. அந்த வரலாற்றுத் தரவுகளை அறிவியல்பூர்வமாக நிறுவுவதற்கு பல்வேறு அகழ்வாய்வுகளில் இன்றைக்கு தமிழ்நாடு தொல்லியல் துறை மேற்கொள்கிறது.

  வசந்தி செய்த காரியத்தை பார்த்தீங்களா.. தடுமாறிய புத்தி.. போலீசில் வசமாக சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர்வசந்தி செய்த காரியத்தை பார்த்தீங்களா.. தடுமாறிய புத்தி.. போலீசில் வசமாக சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர்

  கி.மு. 6ம் நூற்றாண்டு

  கி.மு. 6ம் நூற்றாண்டு

  ஒரு காலகட்டத்தில் என்ன சொன்னார்கள் என்றால், தமிழ் மொழியின் தொன்மைக்கு சங்க காலத்தில் உள்ள இலக்கியங்கள் மட்டும்தான் சான்று என்று சொன்னார்கள். ஆனால், மதுரை மாவட்டம், மாங்குளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில், பாண்டியன் நெடுஞ்செழியன் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டு நூற்றாண்டுகள் முன்பாக அந்த கல்வெட்டு பொறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் புலிமான்கோம்பையில் கிடைத்த கல்வெட்டு தமிழ் பண்பாடு அதற்கும் முந்தைய காலகட்டத்திலிருந்து துவங்குவதை உறுதி செய்தது.
  இப்போது அகழாய்வில் பல அரிய ஆவணங்கள், பொருட்கள் கிடைக்கின்றன. அவை அனைத்தும், கரிம பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. நமக்கு கிடைத்துள்ள தொல்லியல்துறை பொருட்களை ஆய்வு செய்ததன் மூலம் கிறிஸ்து பிறப்பதற்கு 6 நூற்றாண்டுகள் முன்பாகவே தமிழினத்தின் தொன்மை இருந்து வருகிறது என்பது நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

  கங்கை சமவெளி முதல் வைகை சமவெளி வரை

  கங்கை சமவெளி முதல் வைகை சமவெளி வரை

  சிவகளை ஆய்வுகள் இரும்பு காலத்தின் தொடக்க காலத்திற்கே நம்மை அழைத்துச் செல்கிறது. நம்முடைய பண்பாட்டுக் காலம் முன் நோக்கியதாக இருக்கும் என்பது தொல்லியல் துறை மூலம் நடக்கக்கூடிய அகழாய்வுகளில் நிரூபணமாகிறது.
  இரண்டு நாட்களுக்கு முன்பு வெள்ளியிலான முத்திரை காசு கீழடியில் கிடைத்தது கிறிஸ்து பிறப்பதற்கு நான்கு நூற்றாண்டுகள் முன்பாக இந்த நாணயம் புழக்கத்தில் இருந்து இருக்க வேண்டும் என்கிறார்கள். அப்படியானால் மௌரியர்கள் மற்றும் நமக்கும் வணிக தொடர்பு இருந்திருக்கிறது. கங்கைச் சமவெளிக்கும், வைகைச் சமவெளிக்கும் இருக்கக்கூடிய தொடர்பு நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய காசு நம்மிடத்தில் கிடைக்கிறது என்றால், வணிக குழுக்கள் அங்கிருந்து இங்கே வந்திருக்கிறார்கள் என்பதற்கு இது சான்று. நாகரிகம் மிகுந்த ஒரு சமுதாயம், வணிகம் மேற்கொண்டு இருக்கக்கூடிய ஒரு சமூகமாக தமிழர்களாகிய நாம் இருந்திருக்கிறோம் என்பதற்கு இலக்கிய சான்று மட்டுமல்லாது இது அறிவியல் பூர்வமான சான்றாகவும் அமைந்துள்ளது.

  வயிறு எரியட்டும்

  வயிறு எரியட்டும்

  இத்தனை சான்றுகள் கிடைக்கும்போது அதை எல்லாம் ஏற்றுக் கொள்வதற்கு சிலருக்கு இன்று மனம் வரவில்லை. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், தமிழின் பெருமை, தமிழனின் பெருமை உலகளாவில் எழுந்து வருவதில் சிலருக்கு வயிறு எரிகிறது. அந்த வயிறு நன்றாக எரியட்டும். நான் அவர்களுக்கு சொல்வது.. நீங்கள் வயிறு எரிவதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் தொடர்ந்து இந்த அகழாய்வுப் பணிகளை மேற்கொள்வோம். தமிழின் பெருமையை, தமிழரின் பெருமையை, தமிழரின் தொன்மையை நாம் அறிந்து இருக்கக்கூடிய சான்றுகளின் வாயிலாக அறிவியல் பூர்வமாக பண்பாட்டு தளத்தில் தொடர்ந்து நிறுவுவோம்.

  நமது உணர்வு பொங்கட்டும், பொங்கட்டும்

  நமது உணர்வு பொங்கட்டும், பொங்கட்டும்

  உலகளாவிய தமிழர்களுக்கு, நமது இனம் குறித்த பெருமை அறிய இத்தகைய அகழ்வாய்வு தேவை. ஆனால் இது தேவையற்றது என்று சில வேலையற்றவர்கள் கூறினால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அவர்களுக்கு வயிறு நன்றாக எரியட்டும். ஆனால், பேரறிஞர் அண்ணா சொன்னது போல, இந்த பண்பாட்டு தீ, தமிழ் நாகரீக பண்பாட்டு தீ, அகிலமெல்லாம் பரவட்டும்.. தீ பரவட்டும்.. நமது உணர்வு பொங்கட்டும்.. பொங்கட்டும்.

  கீழடி நாணயம்

  கீழடி நாணயம்

  இதுபோன்ற வயிற்று எரிச்சல் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனும் அவர்களை எதிர்ப்பான். இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்தார்.துக்ளக்கில் கீழடி குறித்து வெளியிட்ட கட்டுரைக்கான பதிலடியா உங்கள் பேட்டி என்ற நிருபர்கள் கேள்விக்கு, பதிலளித்த தங்கம் தென்னரசு, யாரையும் நான் தனிப்பட்டு குறிப்பிடவில்லை. தமிழ்பண்பாட்டு சூழலில் நாம் முன்னெடுத்துள்ள முயற்சியை யார் கொச்சைப்படுத்தினாலும் அது கண்டிக்கத்தக்கது என்றார். முன்னதாக தனது டுவிட்டர் பக்கத்தில், வெளியிட்ட வெள்ளி நாணய புகைப்படத்துடன், "கீழடியின் கொடை குறைவதில்லை! கங்கைச் சமவெளியுடனான பழந்தமிழர் வணிகத் தொடர்பிற்கான மற்றுமொரு சான்று. வெள்ளியிலான முத்திரைக் காசு (Punch Marked Coin) ஒன்று கீழடி அகழ்வாய்வுப் பண்பாட்டு அடுக்கில் 146 செ.மீ ஆழத்தில் கிடைக்கப் பெற்றுள்ளது. காலம் பொ.யு.மு 4ம் நூற்றாண்டின் நடுப்பகுதி" என்று பதிவிட்டுள்ளார்.

  English summary
  "Some people have stomach aches because the excavations are providing scientific evidence about the antiquity of the Tamils. We are not worried about that. The excavations will continue," says Minister Thangam Thennarasu.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X