மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு விழா எப்படி நடத்தப்படும்.. இந்து அறநிலையத்துறை விளக்கம்

Google Oneindia Tamil News

மதுரை: தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு தமிழ் ஆகம விதிபடியும், சமஸ்கிருதமும் சேர்த்துதான் 1997 நடத்தப்பட்டது. அப்படித்தான் இப்போதும் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கி.பி 1006ஆம் ஆண்டில் மாமன்னர் ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டு, 1000 ஆண்டுகள் கடந்த பின்பும் கூட, இன்றைக்கும் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் கம்பீரமாக நிற்கிறது தஞ்சை பெருவுடையார் கோயில்.

உலகம் முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் தினமும் வந்த இந்த கோவிலை பார்த்து பிரமித்து செல்கிறார்கள். தமிழர்களின் சாதனைக்கு எடுத்துக்காட்டாக திகழும் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலுக்கு 1997ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) நடைபெற்றது.

 தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த ஆணையிட சீமான் மீண்டும் வலியுறுத்தல் தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த ஆணையிட சீமான் மீண்டும் வலியுறுத்தல்

விழாவில் தீவிபத்து

விழாவில் தீவிபத்து

அப்போது யாகசாலை பூஜையின்போது பந்தலில் பற்றிய தீ கோயில் முழுவதும் பரவியது. இந்த தீ விபத்தில் சிக்கி 48 பேர் உயிரிழந்ததும், பலரும் படுகாயம் அடைந்தனர். இதன்பின்னர் கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. இந்நிலையில் வரும் பிப்ரவரி 5ம் தேதி தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு நடத்துவதென்று பிரகதீஸ்வரர் கோவில் நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் துறை ஆகியவை சேர்ந்து முடிவெடுத்து உள்ளன.

தமிழில் குடமுழுக்கு

தமிழில் குடமுழுக்கு

இது தொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில், தமிழரின் திராவிட கட்டடக் கலைப் பண்பாட்டுச் சின்னமாக, ஆயிரம் ஆண்டுகள் கடந்த பேரதிசயமாக விளங்கும் தஞ்சைப் பெருவுடையார் கோவிலின் திருக்குடமுழுக்கு விழாவினைத் தமிழில் நடத்திட வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதே கருத்தை எதிர்க்கட்சியினர் பலர் வலியுறுத்தி உள்ளனர்.

சைவ அர்ச்சனை

சைவ அர்ச்சனை

சமஸ்கிருதத்தில் நடத்தப்பட்டது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, தமிழில் அர்ச்சனை செய்ய நபர்கள் இல்லை என்றும், ஆனால், தற்போது, சைவ அர்ச்சனை பயிற்சி பெற்றவர்கள் உள்ளதால், அவர்களைக் கொண்டு நடத்தலாம் என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்து அறநிலையத்துறை

இந்து அறநிலையத்துறை

இந்து அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அப்போது குறுக்கிட்டு வாதிடுகையில், ஆகம விதிகளின்படியே குடமுழுக்கு நடைபெற உள்ளதாக, தெரிவித்தார். இதையடுத்து, பிரகதீஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரை எதிர்மனுதாரராக சேர்க்க மனுதாரருக்கு உத்தரவிட்டு வழக்கை வருகிற 27ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

 தமிழக அரசு

தமிழக அரசு

இதனிடையே தஞ்சாவூர் பெரிய கோவில் குடமுழுக்கு விழா, வருகிற பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தஞ்சை பெரிய கோவிலில் கும்பாபிஷேகப் பணிகளை கண்காணிக்க தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் 21 அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது.

English summary
thanjavur big temple kumbabishekam 2020 : According to the rule of the kumbabishekam festival, says Hindu Charity Department
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X