மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஹைட்ரோகார்பனுக்கு எதிராக மனிதசங்கிலி.. மரக்காணம் to ராமேஸ்வரம்.. அனுமதி வழங்க ஹைகோர்ட் உத்தரவு

Google Oneindia Tamil News

மதுரை: தஞ்சாவூர் டெல்டா பகுதியில் மீதேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் வாயு எடுப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதை வெளிப்படுத்தும் விதமாக காஞ்சிபுரம் மாவட்டம் மரக்காணத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வரை மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதற்கு அனுமதி கேட்டு தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, உரிய நிபந்தனையுடன் அனுமதி வழங்க உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் டெல்டா பகுதியில் மீதேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் வாயு எடுப்பதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காஞ்சிபுரம் மாவட்டம் மரக்காணத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வரை மனித சங்கிலி போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

இதற்கு காவல்துறை அனுமதி அளிப்பது தொடர்பாக எந்த பதிலும் அளிக்காததால் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த லெனின் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இது தொடர்பாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

ராஜன் செல்லப்பா சொன்னாலும் சொன்னார்.. ஆனால் யார் அந்த ஒற்றைத் தலன்னு சொல்லவே இல்லையே ராஜன் செல்லப்பா சொன்னாலும் சொன்னார்.. ஆனால் யார் அந்த ஒற்றைத் தலன்னு சொல்லவே இல்லையே

ஹைட்ரோகார்பன்

ஹைட்ரோகார்பன்

அதில், அவர் கூறியுள்ளதாவது: " நான் "பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம்" என்ற இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பு செயலராக இருந்து வருகிறேன். இந்த இயக்கம் மூலம் விவசாயிகளுக்கு கல்வி கற்பித்து, இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு செய்து வருகிறோம். தஞ்சாவூர் டெல்டா பகுதியில் மீதேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் வாயு எடுப்பதற்காக அரசு திட்டமிட்டு வருகிறது. இதனால் விவசாயம் முற்றிலுமாக அழியும் அபாயம் உள்ளது.

 காவல்துறையிடம் மனு

காவல்துறையிடம் மனு

எனவே தஞ்சாவூர் டெல்டா பகுதியில் மீதேன் மற்றும் ஹைட்ரொ கார்பன் வாயு எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வருகிற ஜூன் 12 ம் தேதி அன்று காஞ்சிபுரம் மாவட்டம் மரக்காணத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வரை மனித சங்கிலி போராட்டம் நடத்துவதற்காக தமிழக காவல்துறை தலைவரியிடம் மனு அளித்தும் எவ்வித பதிலும் அளிக்கவில்லை.

ஜுன் 12ம் தேதி

ஜுன் 12ம் தேதி

எனவே தஞ்சாவூர் டெல்டா பகுதியில் மீதேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் வாயு எடுப்பதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வருகிற ஜூன் 12 ம் தேதி அன்று காஞ்சிபுரம் மாவட்டம் மரக்காணத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வரை மனித சங்கிலி போராட்டம் நடத்த அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார் .

வேறு ஒரு தேதியில்

வேறு ஒரு தேதியில்

இந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பாரதிதாசன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், " நாளை மனித சங்கிலி நிகழ்வு நடைபெறுவதாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சுமார் 600 கிலோ மீட்டர் தூரம் என்பதால், போதிய பாதுகாப்பு வழங்க இயலாத நிலை உள்ளது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நீதிபதி மனுதாரரிடம், வேறொரு தேதியில் மனித சங்கிலியை நடத்தலாமே என கேள்வி எழுப்பினர்.

உயர்நீதிமன்றம் அனுமதி

உயர்நீதிமன்றம் அனுமதி

அதற்கு மனுதாரர் தரப்பில் ஜூன் 23 ஆம் தேதி அன்று நிகழ்வை நடத்த அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அதைத்தொடர்ந்து நீதிபதி, மனுதாரர் ஜூன் 14ஆம் தேதி சட்ட ஒழுங்கு கூடுதல் காவல்துறை தலைவரிடம் நேரில் ஆஜராகி, விளக்கம் அளிக்கவும், 18 ஆம் தேதிக்குள் 23 ஆம் தேதி மனித சங்கிலி நடத்த உரிய நிபந்தனையுடன் அனுமதி வழங்க வேண்டுமென்றும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

English summary
The human chain protest against the hydrocarbon from Rameshwaram to Marakkanam, madurai high court bench allowed
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X