மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மநீம என்ற பெயரே சரியில்லை... கட்சியை கலைத்து விடுங்கள் கமல்... செல்லூர் ராஜு சொல்கிறார்

Google Oneindia Tamil News

திருப்பரங்குன்றம்: கமல்ஹாசன் கட்சியை கலைத்து விட்டு செல்லலாம் என்று அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார்.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து அவர் பெயர் கோட்சே என்றார். மேலும் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரனாக, அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருப்பதாக தெரிவித்தார். இதற்கு பாஜகவினர் உட்பட இந்து அமைப்புகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, காவல்நிலையங்களில் புகார் மனு அளிக்கப்பட்டு வருகிறது.

The Name of the Makkal Needhi Maiam is not Good, says Minister Sellur Raju

காலியாக உள்ள 4 சட்டமன்றத் தொகுதிக்கும் தேர்தல் நடக்க, இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது. கமல்ஹாசனின் பிரச்சார பயணம் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மதுரை திருப்பரங்குன்றத்தில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து வாக்கு சேகரித்த செல்லூர் ராஜூ, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

மத மோதலை தூண்டி விடுகிறார்... கமல்ஹாசன் மீது சென்னை மடிப்பாக்கம் போலீசில் புகார் மத மோதலை தூண்டி விடுகிறார்... கமல்ஹாசன் மீது சென்னை மடிப்பாக்கம் போலீசில் புகார்

அப்போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்ற கமலின் பேச்சு குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து தெரிவித்துள்ள, மக்கள் நீதி மய்யம் என்ற பெயரே சரியில்லை என்றார். மேலும், தோல்வி பயத்தில் திமுக பணப்பட்டுவாடா செய்து வருகிறது என்றும் நம்மிடம் இருந்து உதிர்ந்த இலை தினகரன் அணியினர் எனவும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியினர் பணம் கொடுத்தால் மக்களே வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால், அதிமுகவிற்கு ஓட்டு போடுங்கள் என்றும் கூறினார். முன்னதாக, திருப்பரங்குன்றத்தில் அதிமுக மாபெரும் வெற்றிப் பெருவதன் மூலம் திமுகவிற்கு சவுக்கடி கிடைக்கும் என்றும் பேசினார்.

English summary
Minister Sellur Raju Said that The Name of the Makkal Needhi Maiam is not Good
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X